மதுரை திருமங்கலம் பட்டாசு ஆலை வெடி விபத்து..சிதறிய உடல் பாகங்கள்..6 பேர் பலி - ஆளுநர் ரவி இரங்கல்
மதுரை: திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகினர்.
ஒருவரது உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.
விபத்து நிகழ்ந்த இடம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 3 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.

6 பேர் பலி
இந்த விபத்தில் வடக்கம்பட்டியை சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி, புளியகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி, அழகுசிறையை சேர்ந்த பிரேமலா உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிதறிய உடல் பாகங்கள்
கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானதில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை
படுகாயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications