மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை, குமரியில் நிலைமை மோசம்.. உள் மாவட்டங்களில் அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள்.. கலங்கடிக்கும் டேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை தாண்டி உள் மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் ஒரே நாளில் பதிவாகி உள்ளது

தவறான முடிவுகள்.. வேகமாக வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு.. இந்தியாவில் கொரோனா மோசமாக காரணம்.. ஆன்டனி பவுசி தவறான முடிவுகள்.. வேகமாக வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு.. இந்தியாவில் கொரோனா மோசமாக காரணம்.. ஆன்டனி பவுசி

தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1468864 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ்

ஆக்டிவ்

தமிழகத்தில் முக்கியமாக ஆக்டிவ் கேஸ்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் சதவிகிதம் 43.4% உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 172735 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு உள் மாவட்டங்களில் கேஸ்கள் உயர்ந்ததும் முக்கிய காரணமாகிறது.

குமரி

குமரி

முக்கியமாக இன்று கன்னியாகுமரியில் 1076 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. மதுரையில் 1172 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. திருவள்ளூரில் 1344 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. திருச்சியிக் 879 கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 961 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

 மதுரை

மதுரை

உள்மாவட்டங்களில் இப்படி அதிகரிக்கும் கொரோனா கேஸ்களால்தான் ஆக்டிவ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக குமரி, மதுரை, திருவள்ளூரில் தினசரி கேஸ்கள் 1000ஐ தாண்டி உள்ளதால் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த டிரெண்ட் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன்?

ஏன்?

இப்போதுதான் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இதில் பல புதிய கேஸ்கள் அடுத்த 20 நாட்களுக்குள் தெரிய வரும். இதனால் இனி வரும் நாட்களில் உள் மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இதனால் உள்மாவட்டங்களில் மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக கட்டுப்படுத்தப்படும் கேஸ்கள் 20 நாட்களுக்கு பின்பே தெரிய வரும். இந்த மாத இறுதியில்தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Active Coronavirus cases increases in the inner districts of Tamilnadu like Madurai, Kumari for the past 10 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X