ஏம்ப்பா "கில்லி" சிவா.. விஜய் பாட்டுக்கு சிவனேன்னு இருக்காரு.. இப்படி நொறுக்கி அள்ளிட்டியேப்பா!
மதுரை: புரட்சித் தலைவர் விஜய், புரட்சித் தலைவி சங்கீதா என மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது அரசியலுக்கு வர விஜய்க்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்து வருவது போல் சங்கீதாவுக்கும் ரசிகர்கள் அழைப்பு விடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் தனது பிரச்சினையாக நினைத்து உருகும் புள்ளீங்கோ நிறைய பேர் உள்ளனர்.
உதாரணமாக அண்மையில் வருமான வரி சோதனையின் போது நடிகர் விஜய்க்கு ஆதரவாக நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் சாரை சாரையாக ரசிகர்கள் குவிந்தனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணமாகும்.

வாழ்த்துகள்
இந்த நிலையில் விஜய்க்கும் இலங்கைத் தமிழரான சங்கீதாவுக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளையும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் விஜய்- சங்கீதா இணைந்திருக்கும் புகைப்படத்தை போஸ்டராக ஒட்டியும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சித்தரிப்பு
இந்த நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே- புரட்சித் தலைவியே வாழிய பல்லாண்டு என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் விஜய்யின் உருவத்தை எம்ஜிஆர் போன்றும் சங்கீதாவின் உருவத்தை ஜெயலலிதா போலும் சித்தரித்துள்ளார்கள். இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மனைவி சங்கீதா
ஏற்கெனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்த போஸ்டரை பார்க்கும் போது விஜய் மனைவி சங்கீதாவையும் அவர்கள் அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை பார்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் முக்கிய முடிவுகள்
மதுரை பல்வேறு அரசியல் மாற்றங்களையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் தந்துள்ளது. மதுரையில் முக அழகிரி, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோருக்கு விதவிதமான போஸ்டர் அடித்துள்ள நிலையில் தற்போது விஜய், சங்கீதாவுக்கும் போஸ்டர்கள் அடித்துள்ளது மற்ற மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications