வாத்தி ப்ளீஸ் கம்மிங்.. நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் போஸ்டர்கள்!
மதுரை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அஜித், ரஜினியை போலவே நடிகர் விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு.

விஜய் பிறந்தநாள்
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில் பல போஸ்டர்கள் சுவாரஸ்யமான அடைமொழிகளுடன், சில போஸ்டர்கள் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல் உள்ளதால் பேசு பொருளாகி உள்ளது.

விஜய் அறிவுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவரது ரசிகர்கள் விடாப்பிடியாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

'எங்கள் கவலைகளின் தடுப்பூசியே'
பெரியார் நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் அதிகளவில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் மக்களின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தையும் வைரலாக்கி வருகிறது. ''தமிழகத்தில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக், அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மாக்'' ''எங்கள் கவலைகளின் தடுப்பூசியே'' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன.

ரஜினியை பின்பற்றி..
மருந்து குப்பியில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. இதில் பல போஸ்டர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன. நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக அரசியலுக்கு அழைத்து வந்தனர். கடைசியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ரஜினி. தற்போது இதே முறையை பின்பற்றும் விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications