எல்லோரும் ஒன்னு சேரணும்! ‘அவர்’ வர்றாராமே? கண்டிப்பாக சொல்றேன்! மதுரையில் ஆவலை வெளிப்படுத்திய ஓபிஎஸ்
மதுரை : பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி வந்தால் சந்திப்பேன். பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை என மதுரையில் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறியுள்ளார்.
மதுரை,நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் காதணிவிழாவில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இதற்காக மதுரை வந்த அவரை நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், குழந்தைகளை ஆசீர்வதித்தார். ஓபிஎஸ் வருகையையொட்டி பிளக்ஸ் பேனர் அதிமுக கொடிகள் என அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டம் காட்டியிருந்தனர்.

ஓ பன்னீர்செல்வம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து அம்மாவும் உருவாக்கினார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து 50 ஆண்டுகள் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக வளர்த்தனர்,

ஒன்றிணைய வேண்டும்
அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு

ஆளுநர் ரவி
ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை பற்றி தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல.

பிரதமர் வருகை
பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி வந்தால் சந்திப்பேன். பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அப்படி அமைந்தால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன்" என பேசினர்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications