அதிமுகவில் கூலிப்படை..செல்லாக்காசுகள் அதிமுகவை சிதைக்க முடியாது! அட்டாக்கை ஆரம்பித்த ஆர்பி உதயகுமார்
மதுரை: இருபெரும் தலைவர்களிடம் விலாசத்தை பெற்றவர்கள் இன்றைக்கு கூலிப்படையாக மாறிவிட்டார்கள் எனவும், ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை எழுப்பியவர்கள் செல்லாக்காசாக போய்விட்டார்கள், அதிமுகவிற்கு சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும் அதிமுகவிற்கு எந்த பின்னடையும் ஏற்படாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியுள்ள அவர்," இன்றைக்கு தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்டெடுக்க எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். ஸ்டாலின் தலைமையினாலான மன்னராட்சி ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சாமானிய மக்களுக்காக உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.

ஆர்பி உதயகுமார்
அவரைக் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் அவர்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
எடப்பாடி பழனிசாமி
இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றார்கள். கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அதிமுகவை சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
அதிமுக தலைமை
இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. இன்றைக்கு தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்த பொழுது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடி. அவர் கருத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இன்றைக்கு தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள். சர்வாதிகளால் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதே போல அவர்களுக்கு துணையாக இருக்கும் கருங்காலிகளும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இதுதான் வரலாறு.
அதிமுக தொண்டர்கள்
இன்றைக்கு அதிமுகவிற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார். அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகளுக்கும் அது அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மனம் உறுதியோடு, விசுவாசத்தோடு எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும்
அதிமுக ஒற்றுமை
அதிமுகவிற்கு சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறிய வேண்டும்.மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடி தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications