மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரைக்காரங்களா நீங்க.. உங்க வைகை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு.. தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரைக்காரங்களா நீங்க.. உங்க வைகை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு.. தெரியுமா?

    மதுரை: மதுரையின் மிக முக்கியமான அடையாளமாக திகழும் ஆல்பர்ட் விக்டர் ( ஏவி மேம்பாலம்) 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த ஏவி மேம்பாலம் 133 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மதுரையில் பாண்டிய மன்னர் காலத்திற்கு பின்னர் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்தனர். திருமலை நாயக்கரும் மதுரையில் ஆட்சி செய்தார்.

    1790 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி மைக்கேல் லியோ மதுரையின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் மதுரை நகரம் வந்தவுடன் 1837ம் ஆண்டு ஜான் ப்ளாக் கெயில் மதுரையிலுள்ள மன்னர்களின் கோட்டைச்சுவரை அகற்றி நகரை விரிவாக்கம் செய்தார். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் பகுதியில் தான் குடியிருந்து வந்தனர்.

    ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு

    வைகையில் பாலம்

    வைகையில் பாலம்

    1857ஆம் ஆண்டு சுதந்திரப் போர் ஏற்பட்டவுடன் ஆங்கிலேயர்கள் வைகையாற்றின் வட பகுதிக்கு தங்கள் அலுவலகத்தை மாற்றினர். இதற்காக வைகையாற்றின் தென் பகுதியும் வட பகுதியையும் இணைக்கும் வகையில் 300 மீட்டர் நீளத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 16 தூண்கள் அமைத்து புதிய பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.

    கலெக்டர் ஆல்பர்ட் விக்டர்

    கலெக்டர் ஆல்பர்ட் விக்டர்


    1884 ம் ஆண்டு கலெக்டராக இருந்த "ஆல்பர்ட் விக்டர்" பாலத்தை கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். பாலத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டரை ஆண்டுகளில் முடிந்தது. 14 தூண்களும் கரும் பாறைகளால் ஆன கற்கள் கொண்டும் பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

     1886ல் திறப்பு

    1886ல் திறப்பு

    1886 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி ஏவி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இது மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் மேம்பாலம் ஆகும். அன்று முதல் வகையில் பெரிய அளவில் வெள்ளம் வந்தாலும் இந்த மேம்பாலம் எந்த சேதமுமின்றி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    133 வருட கம்பீரம்

    133 வருட கம்பீரம்


    பழமை வாய்ந்த ஏவி மேம்பாலம் தனது 133 ஆண்டை நிறைவு செய்துள்ளது. 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது ஏவி மேம்பாலம். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் ஆற்றின் இரண்டு கரைகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து இணைப்பை கொடுத்து வருவது ஏபி மேம்பாலம் ஆகும்.

    செம ஸ்டிராங்

    இன்றும் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏற்கனவே இரண்டு வளைவுகளில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. மேலும் பழுதுகள் ஏற்படாமல் பாலத்தை முறையாக பராமரித்தால் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றனர்.

    நினைவுகளைப் பகிருங்கள்

    மதுரையின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் ஏவி மேம்பாலம் 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மதுரை மக்களிடையே வரலாற்று சிறப்புமிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்காரர்களே.. இந்த பாலத்தின் நினைவுகளை எங்களுடன் கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாமே!

    English summary
    Madurai's identity, Albert Victor bridge built across the River Vaigai has completed 134 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X