அடேங்கப்பா..200 ஆடு 2500 கிலோ பிரியாணி..! மதுரையில் களைகட்டிய பிரியாணி திருவிழா.. இன்னிக்கு ஒரு புடி

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் விமர்சியாக நடைபெற்ற 87-வது முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் 2500 கிலோ பிரியாணி தயாரித்து சாமிக்கு படையிடலப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியம் அருகேயுள்ள, வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 87-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவிலில், ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும்.

கோவில் விழா

கோவில் விழா

87-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் இருந்ததை தொடர்ந்து, விரதமேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன், கிராம இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.

கோவில் விழா

கோவில் விழா

87-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் இருந்ததை தொடர்ந்து, விரதமேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன், கிராம இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.

200 ஆடுகள், 300 கோழிகள்

200 ஆடுகள், 300 கோழிகள்

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா மட்டும் அல்லாது சிங்கப்பூரில் இருந்தும் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200-ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில், அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள்.

ஜாதி மதம் பேதமில்லை

ஜாதி மதம் பேதமில்லை

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர்., ஆயிரக்கணக்கானோர் இந்த அன்னாதனத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும், இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில் முனியாண்டி சுவாமி வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் எனவும் வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி எனவும் கூறினர்.

வெளிநாட்டு பக்தர்கள்

வெளிநாட்டு பக்தர்கள்

தொடர்ந்து, இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை, மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் சிங்கப்பூர் மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் எனவும் பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கொரோனா காலத்திலும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து முனியாண்டி சுவாமியை தரிசித்ததாக வடக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+