2 மணி நேரம் முன்பே! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்! உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட விஜய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று முதல்வர் விஜய் , இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதாக விண்ணப்பத்தில் எழுதி கொடுத்துவிட்டு ஒரு மணி நேரம் தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக மதுரைக்கு வந்த முதல்வர் விஜய், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

madurai joseph Vijay

விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு முட்டி போட்ட படியே தங்க மோதிரத்தை அணிவித்திருந்தார். அது போல் எல்லா குழந்தைகளையும் தூக்கி வைத்து கொஞ்சினார். குழந்தைகளின் தாய்மார்கள் கேட்டதற்கிணங்க செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரத்தை வழங்கினார். பிறகு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவர் அல்லாத ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்து ரோடு ஷோவாக ராணி மங்கம்மா அரண்மனை வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு மியூசியம் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து மியூசியத்தை சுற்றி பார்த்தார். காந்தியின் பெருமைகளை விளக்கும் வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. அதை விஜய் ஆர்வத்துடன் பார்த்தார். இதையடுத்து அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற விஜய், மதிய உணவு, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார்.

அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டது. சித்திரை வீதியில் அம்மன் சன்னதி வாசலில் இறங்கி அங்கிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தார். அமைச்சர் ரமேஷ், அறங்காவலர் குழுத் தலைவரும், பிடிஆரின் தாயாருமான ருக்மணி தலைமையிலான அறங்காவலர்கள் விஜய்யை வரவேற்றனர்.

அப்போது விஜய், ருக்மணியின் காலை தொட்டு வணங்கினார். யானை பார்வதிக்கு பழங்களை கொடுத்தார். இதையடுத்து அம்மன் சன்னதிக்கு சென்ற முதல்வர் விஜய், அர்த்த மண்டபம் முன் அமர்ந்து தரிசனம் செய்தார். தீபாராதனைக்கு பிறகு சிவாச்சாரியார் வழங்கிய குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டார்.

"நான் வரும் போது பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என விஜய் அறிவுறுத்தியிருந்ததால் பக்தர்களும் அந்த சமயத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முக்குறுணி விநாயகர் சன்னதி, சுவாமி சன்னதியிலும் வழிபட்டார். கொடி மரத்தையும் தரிசித்துவிட்டு உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வந்தார்.

அங்கு தரையில் அமர்ந்து கோவில் சார்பில் வழங்கப்பட்ட தேங்காய், பழங்களை பெற்றுக் கொண்டார். அமைச்சர் ரமேஷ், விஜய்க்கு மீனாட்சி சிலையை பரிசாக கொடுத்தார். இதையடுத்து 4.15 மணிக்கு கோயிலுக்கு வந்தவர், 5.15 மணிக்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

முன்னதாக பிற மதத்தை சேர்ந்தவர்கள் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திற்குள் வர எந்த தடையும் இல்லை. சுவாமி சன்னதிக்கு வர தடை உள்ளது. ஒரு வேளை அவர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் அவர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட வேண்டும். அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த முதல்வர் ஜோசப் விஜய், அவரது பாதுகாவலர் நயீம் மூசா ஆகியோர் "இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளது" என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு தரிசனத்திற்கு வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதே போல் திருப்பதியிலும் துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா உறுதிமொழி படிவத்தில் கையெழுத்துவிட்டுச் செல்வது வழக்கம். வேற்று மதத்தவர் யாருக்கும் அனுமதி மறுக்கப்படாது, ஆனால் படிவத்தில் மட்டும் கையெழுத்திட வேண்டும்.

அது போல் ஏபிஜே அப்துல் கலாம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, சோனியா காந்தி, ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்டோர் கோயில் நிர்வாகத்தின் படிவம் 50 -ல் வெங்கடேச சுவாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உறுதி அளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+