மீண்டும் வெள்ளை நிற டெம்போ வேனுக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி! அப்போ அர்பேனியா வேன் என்னாச்சு?
மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் மாநாட்டுத் திடலுக்கு கொடியேற்றுவதற்காக வந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெள்ளை நிற டெம்போ வேனில் பயணித்தார்.
அண்மையில் பிரச்சாரம் மற்றும் வெளியூர் பயணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி அர்பேனியா சொகுசு வேன் வாங்கியிருந்த நிலையில் மதுரை மாநாடுக்கு ஏனோ அதனை பயன்படுத்தவில்லை. அதற்கு பதில் TN52 AB4455 என்ற வெள்ளை நிற டெம்போ வேனை பயன்படுத்துகிறார்.

இதன் பின்னணியில் சில செண்டிமெண்ட் காரணங்களும், பாதுகாப்பு காரணங்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கரும் அந்த வேனில் ஒட்டப்பட்டிருந்தது.
டெம்போ டிராவலர் வேனின் இரண்டு பக்கமும் பி.எஸ்.ஓ.க்கள் 8 பேர் படியில் தொங்கிக் கொண்டு பயணித்தனர். அர்பேனியா சொகுசு வேனில் இத்தனை பேர் தொங்கிக்கொண்டு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான் அவர் வெள்ளை நிற டெம்போ வேனை செலக்ட் செய்ததாக தெரிவிக்கிறார்கள்.
காலை 8 மணிக்கெல்லாம் வெயில் சுள்ளுனு அடித்த போதும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்களும் நின்று கொண்டு கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஹேப்பி.
காலை 10 மணி வரை மாநாட்டுத் திடலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கிறார். மீண்டும் மாலை 4 மணிக்கு மாநாடு மேடைக்கு செல்லவுள்ளார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications