ஆபாசம்.. அடையாள குழப்பவாதி.. மீடியா இடம் கொடுக்குது பாருங்க: விட்டு விளாசிய பிடிஆர்.. யாரை தெரியுதா?
மதுரை: கன்னடரா, தமிழரா என்ற அடையாள குழப்பம் கொண்ட ஒருவர், தனது கட்சியின் மூத்த தலைவர்களை, ஆபாச விஷயங்களை வைத்து வீழ்த்தியவர், பஞ்சாயத்து உறுப்பினராக கூட தேர்ந்தெடுக்கப்படாதவர், மாநில அரசின் கொள்கை விஷயங்களுக்கு ஆணையிடுகிறார் , என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் நிதி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கூட்டம் நடை பெறுவது தொடர்பாக மிகவும் தாமதமாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்ததாகவும், மேலும் கூட்டத்தில் பேச வேண்டிய அஜெண்டா பற்றி அதை விட தாமதமாக தெரிவித்ததாகவும் விமர்சனம் செய்திருந்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

வளைகாப்பு நிகழ்ச்சி
அரசு சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வளைகாப்பு விழாவிற்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்கனவே தான் உறுதி அளித்து விட்டதால், கடைசி நேரத்தில் கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிவித்ததால், லக்னோ செல்ல முடியவில்லை என்று அந்த பேட்டியின்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

போலி செய்திகள்
இந்த நிலையில் அமைச்சரின் கொளுந்தியார் மகளுக்கு வளைகாப்பு என்றும், அந்த விழாவில் பங்கேற்க சென்றுவிட்டதால்தான் அவர் ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் பங்கேற்காமல் சென்றுவிட்டதாகவும், போலி செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டன. இதை பார்த்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் கோபமடைந்து விட்டார்.
Recommended Video

மாட்டு மூத்திரம்
இதுபோல செய்தி பரப்பிய பாஜகவை சேர்ந்த ஒரு பெண்மணியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அவர். மாட்டு மூத்திரம் குடிப்பதன் காரணமாக இதுபோல செயல்படுவதாக காரசாரமாக விமர்சனம் செய்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி டுவிட்டரில் கடும் விமர்சனங்களை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்து வருவதை பார்க்க முடிகிறது.

பிடிஆர் ட்வீட்
இது ஒரு பக்கம் என்றால், இன்று அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் இன்னொரு, முக்கிய புள்ளியை, அவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதோ அவர் ட்வீட் "தமிழக மீடியாக்கள் ரொம்ப கருணையோடு நடந்து கொண்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன். ஏனென்றால் கன்னடரா அல்லது தமிழரா என்ற அடையாள குழப்பம் , ஆடு வளர்ப்பவரா அல்லது போலீஸ் அதிகாரியா என்ற குழப்பம், மேலும் தனது சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களை ஆபாச விஷயங்களை வைத்து வீழ்த்திய ஒருவரின் செய்திகளை மீடியாக்கள் கவர் செய்கின்றவே. பஞ்சாயத்துக்கு கூட தேர்வாகாத, அந்த நபர், மாநில அரசின் கொள்கைகள் பற்றி கட்டளையிட்டு வருகிறார்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளாசியுள்ளார். அவர் யாரை விமர்சனம் செய்கிறார் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரைத்தான் இவ்வாறு பிடிஆர் காட்டமாக, விமர்சிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்கள் கூறுவதைப் பார்க்க முடிகிறது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications