இஞ்ச் கூட நகரவில்லை! திமுகவுக்கு எதிராக ’அவங்களே’ இருக்காங்க.. உடன்பிறப்புகளை உசுப்பேற்றிய உதயகுமார்
மதுரை : உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி வேண்டும் என சொல்லுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக ஒரு இன்ச் கூட அடி எடுத்து வைக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தரவரிசை பட்டியலில் தமிழகம் 15 வது இடத்தை பிடித்தது. திமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு பட்டியலில் தமிழகம் 28 வது இடத்தை பிடித்துள்ளது.

அதிமுக வசைபாடிய முதல்வர்
நீட் தரவரிசை பட்டியலில் தமிழகம் இறங்கி கொண்டே போவது துரதிஷ்டவசமானது, மதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் திறந்து வைத்து உள்ளார். அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் அதிமுகவை வசைபாடி சென்று உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தற்காலிக பதவியில் உள்ளார் என முதல்வர் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஸ்டாலின் திமுகவில் எவ்வாறு பதவிகளுக்கு வந்தார் என நினைவில் கொள்ள வேண்டும், கருணாநிதி கையை பிடித்து திமுகவில் பதவி பெற்றவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி நெருப்பாற்றலில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார். திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிய வரும்.

உண்மை கண்டறியும் சோதனை
உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்.எல்.ஏ க்கள் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி வேண்டும் என சொல்லுவார்கள், அதிமுகவிலிருந்து நீக்கபட்ட ஒரு சில துரோகிகளை தவிர அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியில் கீழ் ஒற்றுமையாக உள்ளோம், அதிமுகவில் இருந்த ஒரு சில துரோகிகளின் பின்புலத்தில் இருந்து கொண்டு திமுக அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறது.

ஓபிஎஸ்
சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாமல் போனது என்பதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் வகிக்கிறார், அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் நீக்கப்பட்டு உள்ளார், அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து நான் பேச தயாராக இல்லை" என்றார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications