“இபிஎஸ் -ஓபிஎஸ் அதிமுகவின் பாதுகாப்பு கவசம்” தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்கிறார் ஆர்பி.உதயகுமார்!
மதுரை : இபிஎஸ் - ஒபிஎஸ் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள் எனவும், 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றில் அதிமுக 7 முறை ஆட்சி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 305 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கிய அட்சய பாத்திரம் அதன் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார்
பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களை தாண்டி செயல்படுகிறது, திமுகவின் அடக்குமுறையை தாண்டி அதிமுக செயல்படுகிறது, அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது, அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது

பாதுகாப்பு கவசம்
இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள், 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றில் அதிமுக 7 முறை ஆட்சி செய்துள்ளது, திமுக அறிவித்த வாக்குறுதியை இன்னும் செயல்படுத்தவில்லை, தமிழகத்தில் முழுதும் நடைபெற்ற நகர்புற தேர்தலில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றியை பெற்றுள்ளது

திமுக முறைகேடு
திமுக கூட்டணி கட்சி போட்டியிடும் இடங்களில் திமுக போட்டியிட்டதை பார்த்தால் கூட்டணி கட்சியினர் கையாளகாதவர்கள் என திமுகவினர் கூட்டணியை பார்க்கிறார்கள் என நினைக்கிறேன், திமுக தலைமையிலான அரசு நாடகங்களை மட்டுமே நடத்துகிறது, மக்கள் அதிமுகவுக்கு மட்டுமே வாக்களித்து உள்ளார்கள், தொழில்நுட்ப கோளாறு செய்தி திமுக வெற்றி பெற்றதோ என தோன்றுகிறது

அறிஞர் அண்ணா
தேர்தல் ஆணையத்தால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர், இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் இணைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளனர், அறிஞர் அண்ணா கற்று கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், அதிமுக தலைமைக்கு அனைவரும் கட்டுப்பாட வேண்டும், அதிமுகவின் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறினார்
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications