சொன்னது என்னாச்சு? எடப்பாடியார் ஆட்சி எப்படி இருந்தது தெரியுமா? டேட்டாவுடன் விளாசிய ஆர்பி உதயகுமார்!
மதுரை : அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தையும் வழங்கவில்லை, அதே போல் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த டேப்லெட் திட்டத்தையும் வழங்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கை மாணவர்களுக்கு கானல் நீராக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது, குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல்நீராக உள்ளது இது வேதனை அளிக்கிறது.
திமுகவின் 163வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில்நான்காம் தலைமுறை ஐந்தாம் தலைமுறை 4G, 5G மாதம் 10GB பதிவிறக்கம் செய்ய வசதியுடன் கூடிய, இணையதள இணைப்புடன் கைக்கணினி (Tablet) அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி
505 தேர்தல் வாக்குறுதியில் இதுவும் கானல் நீராக உள்ளது. இளைய சமுதாயத்தினுடைய எதிர்கால கணினி அறிவை, இந்த கணினி யுகத்தை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே வல்லரசு நாடுகள் கூட இல்லாத வகையில் அம்மா பள்ளியிலே, கல்லூரியிலே ,பாலிடெக்னிக் படிக்கின்ற மாணவர் செல்வங்களுக்கு 2011ம் ஆண்டு மடிக்கணினி வழங்குகிற ஒரு மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து கணினியில் புரட்சி செய்தார்.

மாணவர்களுக்கு மடிக்கணினி
கடந்த பத்து ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்திலே கூட அந்த மடிக்கணினி உற்பத்தி பல்வேறு சவால்களுக்கு நடுவில் அதை பெற்று தந்து சாதனை வரலாறு படைத்தவர் எடப்பாடியார். இன்றைக்கு இரண்டு ஆண்டு காலம் வழங்கவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்கேள்வி எழுப்பினார். அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றாலும், நிதி ஒதுக்கீடு கூட அதில் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்கிற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு எல்லாம் கணினி யுகமாக இருக்கிறது.

திமுக சொன்ன டேப்லெட்
ஆன்லைனில் தான் இன்றைக்கு அனைத்தும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த கணினியுகத்தில் இளைய சமுதாயத்தை அரசு பள்ளியில் படிக்கிற ஏழை எளிய மாணவர்கள் மடிக்கணினி மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு மடிகணினி தந்த ஒரு வரலாற்று புரட்சி செய்த அம்மா. இன்றைக்கு மாணவர்களுக்கு அம்மா வழங்கிய மடிக்கணினியை வழங்கவில்லை. திமுக சொன்ன டேப்லெட் (Tablet) திட்டத்தையும் வழங்கவில்லை.

எப்போது கொடுக்கும்?
பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க 14 வகை கல்விஉபகரணத்துடன் இந்த மகத்தான மடிக்கணினி திட்டத்தை அரசு எப்போது நிறைவேற்றும், எப்போது தொடங்கி வைக்கவும், எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் என இந்த மாணவர்கள் , கவலையோடு கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிற அந்த மாணவ செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கி கல்வி அறிவை அறிவை வளர்ப்பதற்கு இந்த அரசு முன்வருமா ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications