இந்து என்பது மதம் அல்ல! அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்.. எச்.ராஜா விளக்கம்
மதுரை: இந்து என்பது மதம் அல்ல நாடு எனவும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமா, சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்க கூடாது.
1991 விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பி.எஃப்.ஐ. உடன் விசிக இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பாதிப்பு
மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பால் பாக்கெட்டில் 'இது ஹலால் செய்யப்பட்டது' என குறிப்பிடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பாண்டிச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அமைதியாக தான் நடந்தது.

இந்து மதமா?
டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். அவர் டிஜிபியாக இருக்க தகுதி இல்லை. ராஜராஜ சோழன் சிவ பக்தன் எனவே அவர் இந்து தான். இந்து என்பது மதம் அல்ல, அது நாடு. அரசமைப்பு இந்துவை இந்துக்கள் அல்லாதோர் என வகைப்படுத்தி உள்ளது. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் இந்து மதங்கள் தான்.

ராஜராஜ சோழன்
2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில் அதை ஆறாக ஒருங்கிணைத்தார். சிவம் வேற இந்து வேற இல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. எனவே ராஜராஜன் இந்து தான். அரசமைப்பின்படியும் ராஜராஜன் இந்து தான்.
இந்து மதத்திற்கு துவக்கமே கிடையாது. அது அநாதி மதம்.
மாமன்னன் ராஜராஜ சோழன் 100% இந்து மன்னன் தான்.

காலை உணவு திட்டம்
அரசியலில் கூட்டணி என்பது தற்காலிகமானது. பாஜகவுக்கு எதிராக மம்தா - ஸ்டாலின் உள்ளிட்டோரால் அமைக்கப்படும் கூட்டணியால் பலனில்லை. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. அதை திருடி எடுத்து திமுக அரசு செயல்படுத்தி உள்ளது" என கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications