சினிமாவில் வேணா ரஜினி.. ஆனா நிஜத்தில் நான்தான் மலை.. அண்ணாமலை.. எச் ராஜா அலப்பறை!
Recommended Video
மதுரை: சினிமாவில் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆடிப்பெருக்கையொட்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முதல்முறையாக வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாட்டை மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாடு 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் துறவிகள் மாநாடு, பெண்கள் மாநாடு, வைஷ்ணவ மாநாடு, ஐயப்பப் பக்தர்கள் மாநாடு, பூசாரிகள் மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் மாநாடு, இளைஞர்கள் மாநாடு, நதிநீர்ப் பாதுகாப்பு மாநாடு, விவசாயிகள் மாநாடு, சன்மார்க்கர்கள் மாநாடு, சித்தர்கள் மாநாடு ஆகியன நடைபெற்று வருகின்றன.

மாநாடு
அந்தவகையில் இன்றைய தினம் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மதுரையில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதை ஒரு சிலருக்கு பிரச்சினையாக நினைக்கின்றனர்.

நிஜத்தில் நான்தான்
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை. மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தேன்.

மற்ற விலங்குகள்
பால் விற்று கிடைத்த பணத்தில் வளர்ந்து படித்தேன். பசுவின் உடலினுள் 13000 தெய்வங்கள் உள்ளன. எனவே பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றல்ல.

ரஜினி ரசிகர்கள்
இடதுசாரி, தமிழ்த் தேசியம் என மக்களின் மூளை குப்பைத் தொட்டியாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்தார். எப்போதும் எதையாவது டுவிட்டரில் போட்டும், கூட்டத்தில் பேசியும் மாட்டிக் கொள்வதே எச் ராஜாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. ரஜினி ரசிகர்களிடம் எப்படி வறுப்பட போகிறாரோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications