மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மீது ஆதாரமற்ற புகார் கொடுத்தால்...! முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்.. பரபர அறிக்கை!

Google Oneindia Tamil News

மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன்(49). இவர், சகோதரியின் மகனுக்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தர, வெம்பக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பியிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை வாங்கிய விஜயநல்லதம்பி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் விஜயநல்லதம்பி மீது ரவீந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து விஜயநல்லதம்பியை அழைத்து போலீசார் விசாரித்தனர்.

மழை விடுமுறை...அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மழை விடுமுறை...அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ராஜேந்திர பாலாஜி மீது புகார்

ராஜேந்திர பாலாஜி மீது புகார்

அப்போது அவர், '' நான் பலரிடம் இதுபோல் வாங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளேன். ரூ.3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என பகீர் தகவலை கூறினார். ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்

இந்த நிலையில் என் மீது ஆதாரமற்ற புகார் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான் அரசு பதவிகளில் இருந்தபோது சட்டவி திகளுக்கு முரணாக செயல் பட்டதில்லை. யாரும் என் மீது குற்றம் சாட்ட முடியாதபடி அரசியலில் பயணித்து வருகிறேன். எனது மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட வர்கள் எந்தவித ஆதாரமும் இல்லமால் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மக்கள் நம்ப வேண்டாம்

மக்கள் நம்ப வேண்டாம்

இது போன்று செயல்படு பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். குறிப்பாக விஜயநல்லதம்பி என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்கு களில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மோசடி நபர்களை பொது மக்கள் நம்ப வேண்டாம்.

எந்தவித சம்பந்தமும் கிடையாது

எந்தவித சம்பந்தமும் கிடையாது

விஜயநல்ல தம்பிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Former Minister KD Rajendra Balaji has said that he will take legal action against those who make baseless complaints against him. He said the public should not trust such fraudulent individuals
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X