அரசு பள்ளிக்குள் திடீரென விசிட் அடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.. அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஆசிரியர்
மதுரை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் அணிந்து உள்ளனரா, உடல் வெப்பநிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு பிறகு, கைகளில் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிகள் திறப்பு
100% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போலவே தற்போது வகுப்புகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

முதல்வர் உத்தரவு
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆய்வு
இதனையடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உறுதிமொழி அளித்த அமைச்சர்
வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறை வசதி, கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு எப்போதும் செய்யும் எனவும் உறுதிமொழி அளித்தார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications