“கொடுமையிலும் கொடுமை”.. காப்பாத்துவீங்களா? கைவிடுவீங்களா? - ஸ்டாலினுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!
மதுரை : முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களுக்கு தற்போது உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த நிலையில், பலருக்கு உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், முதியோர் உதவித்தொகையை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு . தற்போது கொடுத்ததையும் பறிப்பது கொடுமையிலும் கொடுமை என விமர்சித்துள்ளார்.

முதியோர் ஓய்வூதியம்
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "1962ல் முதியோர் ஓய்வூதியத் தொகை 20 ரூபாயில் இருந்து தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் 500 ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதியத் தொகையை1000 ரூபாயாக உயர்த்தி, தகுதியான நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆயுள் முழுவதும் வழங்குவேன் என்று கூறினார். 2010 திமுக ஆட்சியின் போது 11 லட்ச நபர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஓய்வூதியம் 2011 தேர்தலையொட்டி 14 லட்சம் பேராக உயர்த்தினார்கள். இதற்காக திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை 1200 கோடி.

உதவித்தொகை ரத்து?
மேலும் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், முதியோர் ஓய்வுதிய திட்டத்திற்கு அதிகமான மனுக்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க அரசாணை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டம் வழங்கப்பட்டது. இதற்காக 4,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது சம்பந்தமில்லாத காரணங்களை கூறி ஏற்கனவே வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

கொடுமையிலும் கொடுமை
இது மிகவும் அபாயகரமானதாக உள்ளது, குறிப்பாக கடந்த ஆட்சியில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் இப்படி 9 பிரிவினருக்கு வழங்கப்பட்டது. இந்த தொகையை வைத்து மருத்துவ சிகிச்சைக்கும், தன்னம்பிக்கையுடன், தன்மானத்துடன் வாழ்ந்தார்கள். கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் கொடுமையிலும் கொடுமை தற்போது கொடுத்ததை பறிப்பதாகும்.

எடப்பாடி ஆட்சி போல
இது முதலமைச்சர் கவனத்திற்கு சென்றதா என்று மக்கள் கேட்கின்றனர், குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 வரை ரத்து செய்யப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வருகிறது. இது அரசின் கவனத்திற்கு சென்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே அரசின் புதிய விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆகவே கடந்த பத்தாண்டு காலத்தில் எடப்பாடியார் ஆட்சியில் எப்படி வழங்கப்பட்டதோ, அதேபோல் தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சொன்னார், செய்யவில்லை
இது குறித்து கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையில் நான் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அமைச்சரும் சரிசெய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே முதலமைச்சர் போர்க்கால அடிப்படை மேற்கொண்டு சாமானிய மக்களை காப்பாற்றுவாரா இல்லை, காப்பாற்றாமல் கைவிடுவாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications