மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீழடியில்.. ரூ.12 கோடி மதிப்பீட்டில் விரைவில் திறக்கப்படுகிறது மியூசியம்.. முதன்மை செயலாளர் அதிரடி

கீழடியில் விரைவில் வருகிறது மியூசியம்

Google Oneindia Tamil News

மதுரை: கீழடியில் தொல்லியல் துறையின் மூலம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படுகிறது.. அதற்கான பணிகளும் விரைந்து முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது...

இங்கு நடக்கும் ஆய்வுகள் ஒவ்வொரு முறையும் நமக்கு ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றன.. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன...

கீழடி .. 'அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்'.. தங்கம் தென்னரசு ட்வீட் ! கீழடி .. 'அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்'.. தங்கம் தென்னரசு ட்வீட் !

அகழாய்வு

அகழாய்வு

கீழடி அகழாய்வு தொடங்கும்போது, தொடக்க வரலாற்று காலத்தின் வாழ்விட பகுதியைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.. ஆனால், இந்த கீழடி அகழாய்வில் பலகட்டங்களாக கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்தன..

ஆய்வகள்

ஆய்வகள்

ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளானது ஆய்வாளர்கள், பொதுமக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, தொல்லியல் துறை சார்பாக ஒரு மியூசியம் கட்ட முடிவாகி, அந்த பணியும் நடந்து வருகின்றன.. இதற்காக கலெக்டர், சிறப்பு கவனம் எடுத்து தேவையான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

 முதன்மை செயலாளர்

முதன்மை செயலாளர்

இந்நிலையில், அகழ்வாராய்ச்சி மையம் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் பணி ஆய்வு செய்யப்பட்டன.. கலெக்டர் பி.மதுசூதன்ரெட்டி முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.

மியூசியம்

மியூசியம்

அப்போது, தொல்லியல் துறையின் மூலம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ஒரு மியூசியம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்... பிறகு, அந்த பணிகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கும்படியும், திட்டமிட்ட காலத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்றும், அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்... அதேபோல, கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 6ம் கட்ட அகழ்வாய்வு, நடந்து வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 அருங்காட்சியம்

அருங்காட்சியம்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், "கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்திட தொல்லியல் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கீழடி, கொந்தகை, மணலூர் போன்ற பகுதியில் கண்டறியப்படும் அரிய வகை பொருட்களை, பொதுமக்கள் கண்டுகொள்ளலாம்.. அதேபோல, சிந்து சமவெளி நாகரிகத்தையும் தெரிந்து கொள்ளும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது... அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்" என்றார்.

English summary
Keezhadi museum in archaeology excavation at Sivagangai district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X