மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு.. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்?.. பொன்னார் கேள்வி!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை பா.ஜ.க மாநகர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்களை பெற்றார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும்கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருவிழாவாக பா.ஜ.க இன்று நிகழ்த்தி வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் போட்டியிட சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பா.ஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விற்பனை

பெட்ரோல், டீசல் விற்பனை

பா.ஜ.க.வில் தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டி நாளை தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உலக சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலைகேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மோடி அரசு தலையீடு இல்லை.

பல கோடி செலவாகும்

பல கோடி செலவாகும்

குறிப்பாக சாலை போன்ற உட்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்ற பல கோடி செலவாகும் திட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் தான் சரி செய்ய முடியும். காங்கிரஸ், திமுக ஆட்சியில் சேர்ந்துள்ள கடன்சுமையை சரிசெய்வதற்கும் இதனையே நம்பி உள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் ஏற்கவில்லை

விவசாயிகள் ஏற்கவில்லை

இன்றைக்கு 8 மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்ததுவதும் பெட்ரோல் மூலமா கிடைக்கும் வருவாய் மூலமாகத்தான். வேளாண்சட்டங்கள் வாபஸ் பெற்றது குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளித்துள்ளார். விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பிரதமர் நிலம் வழங்குவது, உரம் வழங்குவது, பூச்சிகள் கொல்லிகள் மானியவிலையில் வழங்கிய போதும் அனைத்திற்கும் இறுதியாக சந்தை படுத்தும் போது மட்டும் விவசாயிகள் ஏற்கவில்லை.

தமிழ் மொழியில் திட்டம் வேண்டும்

தமிழ் மொழியில் திட்டம் வேண்டும்

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ் மொழியில் மாற்றி பயன்படுத்தினால் மக்களுக்கு எளிமையாக புரியும். தமிழக மழை வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்த பின்னர் மத்திய அரசு நிதி வழங்கும். அதிகப்படியான நிதி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.

அம்மா உணவக விவகாரம்

அம்மா உணவக விவகாரம்

தேர்தல் வரும் சமயத்தில் தான் கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியுடுவது குறித்து முடிவு செய்யப்படும், இன்றளவும் அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. கலைஞரின் பல திட்டங்கள் உள்ள நிலையில் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களில் கலைஞரின் புகைப்படத்தை இணைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது,

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றால் அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். தமிழகத்தில் போலீஸ் சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்களின் கடமையில் இருந்து திமுக அரசு தவறி இருக்கின்றது என்பதையே காட்டுகிறது.

English summary
Law and order has deteriorated in Tamil Nadu. Former Union Minister BJP's Pon. Radhakrishnan has accused the DMK government of failing in its duty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X