Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்.. அசால்ட் காட்டிய கார்த்தி முதலிடம்! கார் பரிசு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் 19 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதேபோல் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார் அபி சித்தர். இதேபோன்று மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஏவிஎம் பாபு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

Madurai Alangaanallur Jallikattu Ends Karthi Claims Top Spot with 19 Bulls

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இரு போட்டிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள், கார் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரியத்துடனும் தொடங்கியது.

அமைச்சர் மூர்த்தி தலைமையில்

இந்த ஜல்லிக்கட்டை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசலில் அரசு வழிகாட்டுதலின்படி தொடங்கியது.

அமைச்சர் மூர்த்தி தலைமையில், மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

19 காளைகளை அடக்கி

முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம்மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பசாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் தகுதி பெற்ற 1,137 காளைகள் களத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க ஒவ்வொரு சுற்றிலும் தகுதி பெற்ற 933 வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு சுற்றாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கருப்புராயிணியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார்.

ரூ.8 லட்சம் கார் பரிசு

முதல் பரிசு வென்ற வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படுகிறது.
இதேபோல் 17 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடம் பிடித்தார். இதேபோன்று மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார்.

சிறந்த காளை

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஏவிஎம் பாபு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 13 பேர் உள்பட 58 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+