மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 60 கோடி சொத்து மோசடி.. கைதான துணை கலெக்டருக்கு பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி சொத்து மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட துணை கலெக்டர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் அசோகாவிலாஸ் என்ற பெயரில் பங்களா உள்ளது . அதனுடன் இணைந்த தோட்டம் என சுமார் 2 ஏக்கர் நிலமும் இருக்கிறது. இந்த நிலம் மற்றும் பங்களாமீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.60 கோடி என சொல்லப்படுகிறது.

Collector meenakshi amman

ஆனால் அந்த சொத்துக்கான பட்டாவை மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்து மோசடி நடந்துள்ளதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் ஆகியோரை மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.

போலீஸார் அவர்களிடம் கோயில் நிலத்தினை எப்படி வகை மாற்றி பத்திரப்பதிவு செய்தார்கள். இதன் பின்னணி என்ன என்று விசாரித்தனர். அப்போது தான் பெரிய உண்மை வெளிவந்தது. ஏனெனில் அப்போதைய மதுரை வடக்கு தாசில்தாராக பணியாற்றிய அன்பழகன், வருவாய் ஆவணங்களில் இருந்து கோவிலின் உரிமையை நீக்கிவிட்டு ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேருக்கு பட்டாவை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே வடக்கு தாசில்தார், அன்பழகன் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நிலஎடுப்பு பிரிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக துணை கலெக்டர் அந்தஸ்தில் பணியில் மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து அன்பழகனையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அடுத்த நடவடிக்கையாக அவர் சஸ்பென்ட் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

இதுகுறித்து சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர், மதுரை வருவாய் நிர்வாகத்துறைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த உத்தரவு மதுரை மத்திய சிறை அதிகாரிகள் மூலம் அன்பழகனிடம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் துணை கலெக்டர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+