"விஐபிகளை கவனிக்கணுமா?” அமைச்சர் ரமேஷின் பழைய பேச்சால் வெடிக்கும் சர்ச்சை! மதுரை கும்பாபிஷேக சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்போது நடந்த குளறுபடிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே அமைச்சர் ரமேஷின் பழைய பேச்சும் தற்போதைய பேச்சும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மீனாட்சி அம்மனின் அருளை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். கோபுர கலசங்களுக்கும் தங்க விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றபோது, கோபுரத்தில் இருந்து தெளிக்கப்படும் புனித நீர்த்துளிகள் தங்கள் மீதும் விழும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.

Madurai Meenakshi Temple Kumbabhishekam Minister Ramesh

மீனாட்சி அம்மன்

ஆனால், பாதுகாப்பு தடுப்புகள் காரணமாக சாதாரண பக்தர்கள் நின்றிருந்த பல பகுதிகளுக்கு கோபுரக் கலசங்களில் இருந்து தெளிக்கப்பட்ட நீர் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம், விஐபிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நின்றிருந்த பகுதிகளில் புனித நீர் அதிகமாக தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்குமாறு கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கும்பாபிஷேக ஏற்பாடுகளில் அனுபவம் வாய்ந்த அறங்காவலர்கள் புறக்கணிக்கப்பட்டதே இத்தகைய குழப்பங்களுக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய தவெக அரசு சட்ட திட்டங்களை மீறி செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ்

இந்தச் சூழலில் அமைச்சர் ரமேஷின் பழைய பேச்சும் தற்போதைய பேச்சும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமைச்சர் ரமேஷ் முன்பு அளித்த பழைய பேட்டியில், "பொதுவழியில் போறது அவமானமா? மக்களோடு மக்களா நின்னு சாமியை பார்க்குறதுல என்ன அவமரியாதை இருக்குது? இது என்ன தமிழ்நாட்டில் ஒரு புது கலாச்சாரமாக இருக்கு.." என்று காட்டமாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிகாரிகள் குறித்த கேள்விக்கு அவர், "அதிகாரிகளுக்கு வேற வேலையே இல்லையா? கோயிலுக்கு வர விஐபிகளை கூட்டிக்கிட்டு போய் தரிசனம் பண்ண வச்சு, அவங்களை கவனிக்கிறது மட்டும்தான் அவங்க வேலையா? அதிகாரிகள் எல்லாம் மக்கள் பார்க்க தான் இருக்கிறார்களே தவிர விஐபிக்களை பார்க்க இல்லை" என்றார்

புதிய பேச்சு

இருப்பினும், இன்றைய தினம் அதற்கு நேர்மாறாக சில தகவல்களை குறிப்பிட்டார். அவர் இன்று கூறுகையில், "முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி பிரதிநிதிகள் என அனைவருக்கும் விகிதாச்சார அடிப்படையில் முறைப்படி பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருத்தருக்கு அதிகமாகவும் இன்னொருவருக்கு குறைவாகவும் கொடுத்திருப்பதாக எல்லாம் இல்லை. அனைவருக்கும் சமமாகவே கொடுத்துள்ளோம்.

அங்கு அதிகபட்சம் சுமார் 9,500 முதல் 10,000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால், பாதுகாப்பு கருதியே முடிந்தவரை பார்த்து பார்த்து செய்தோம். மேலும், பொதுமக்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதால் தான் காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்ட பொது தரிசனத்தை முன்கூட்டியே காலை 8:30 மணிக்கே அனுமதித்தோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+