மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக்
மதுரை: மதுரைக்கு மெட்ரோ ரயிலை மறுத்தது ஏன், இதுவரை சொல்லாத விஷயத்தை திருப்பரங்குன்றம் முருகன் முன் சொல்கிறேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் கிருத்திகா தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தவெக சார்பில் நிர்மல் குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், அதாவது மத்திய அரசு மாநில அரசுக்கு மதுரை மெட்ரோ, கோவை மெட்ரோ குறித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத ஒரு விஷயத்தை இந்த முருகன் முன்பு நான் சொல்கிறேன். மதுரை மெட்ரோ குறித்து மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், நீங்கள் மதுரை மெட்ரோ கேட்கவில்லை, தடைபடாமல் டிராபிக்கில் சிக்காமல் போக வேண்டிய ஒரு பேருந்தைதான் (BRTS) நீங்கள் கேட்டுள்ளீர்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுக்கும் ரிப்போர்ட்டை கூட தமிழக அரசு தவறாக கொடுத்திருக்கிறார்கள். எத்தனை பேர் பயணம் செய்ய வேண்டும் என்ற இடத்தில் கூட பிஆர்டிஎஸ் குறித்து சொல்லிவிட்டு மெட்ரோதான் கேட்டதாக முழு பொய்யை தமிழக அரசு சொல்லியிருக்கிறார்கள்.
4 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ வேண்டும் என கேட்டார். அதற்கு பிரதமர், நாங்கள் மெட்ரோ வேண்டாம் என சொல்லவில்லை. மாநில அரசு கொடுத்திருக்கும் கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளோம்.
மெட்ரோ குறித்த விவரங்களை திரும்ப கொடுங்கள் என்றுதான் கேட்டிருக்கிறோம். அது வந்ததும் நாங்கள் பரிசீலிக்கிறோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை மாநில அரசு பதில் அனுப்பவே இல்லை. அப்படி அனுப்பாமல் மதுரை மெட்ரோ குறித்து மேடைக்கு மேடைக்கு ஸ்டாலின் புளுகு மூட்டையை சொல்லிக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு தொகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்றார். இதன்பின் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அலை வீசுகிறது. நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்.
மதுரையில் ராம சீனிவாசன் எம்எல்ஏ-வாகிவிட்டால், உடனடியாக மதுரை மெட்ரோ கோரிக்கையை பிரதமர் மோடியிடம் கொண்டு செல்வோம். அதன்பின் உடனடியாக மதுரைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். தேவேந்திர ஃபட்னாவிஸின் பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும் என்று பதில் அளித்திருந்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications