FQL, VG டிரேடிங் மோசடிக்கு மூளை.. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மதுரை தம்பதி.. வெளிவந்த பெரிய உண்மை

Subscribe to Oneindia Tamil

மதுரை: FQL, VG டிரேடிங் மோசடி என்பது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரம், மதுரை மாவட்டத்தில் மேலூர் சுற்றுவட்டாரங்களில் முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக நடந்த பல கோடி ரூபாய் மோசடி ஆகும். இதற்கு மூளையாக செயல்பட்ட மேலூர் அருகே கட்டையம்பட்டியை சேர்ந்த தம்பதி வெளிநாட்டுக்கு தப்பிஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் இறங்கினர். அவர்கள் சிக்கினால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவரும்.

மதுரை மாவட்டம் மேலூரை தலைமையிடமாக கொண்டு FQL, VG டிரேடிங் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் கடந்தஆண்டு இறுதியில் இருந்து செயல்பட்டது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு 2 மாதங்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்றும், அதற்கு நிதி நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்யும்படியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 45 நாள் முதலீடு செய்தால் அப்படியே டபுள் ஆகும் என்று கூறியுள்ளனர். ஆரம்பத்தில் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக பலருக்கும் பணத்தை டபுள் ஆக கொடுத்துள்ளனர்.

Masterminds behind FQL and VG Trading scams Madurai couple flees abroad

அதோடு பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முகவர்களை கவர்ச்சியான வாக்குறுதிகளை கூறி நியமித்துள்ளார்கள். அதையடுத்து முகவர்கள், கிராமங்களுக்கு சென்று இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளார்கள். பலருக்கும் தொடக்கத்தில் இரட்டிப்பு பணம் கிடைத்ததால் கண் மூடித்தனமாக பலர் நம்பினார்கள்.

இதனால் வெறும் ஆறு மாதத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என நத்தம், மேலூர் சுற்றுவட்டாரங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்தனர். அவர்கள் இரட்டிப்பு தொகையை விரைவில் வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், திடீரென நிதிநிறுவனம் மூடப்பட்டது. ஆப்பும் ஒரேடியாக மூடப்பட்டதுது. இதனால் பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தாலுகாவில் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 9 முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே கைதான முகவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டையம்பட்டியை சேர்ந்த ஒருவர் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டையம்பட்டி இளைஞர், ஹங்கேரி நாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது 'கிரிப்டோ கரன்சி' வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த நபர்களுடன் சேர்ந்து அவர் செயலியை உருவாக்கி மோசடி செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் நிதிநிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடியபோது அந்த நபர் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு இருப்பதால் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள்.

எனவே அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் சிக்கினால் தான் மோசடி சம்பவத்தின் முழு பின்னணியும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மோசடி பணத்தை மீட்பதற்காக சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர். அதில் பொதுமக்கள் முதலீடு செய்த பணம் வடமாநிலத்தில் ஒருவரின் வங்கி கணக்கு உள்பட பலரின் வங்கி கணக்குகளுக்கு மாறி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+