பாஜகவுடன் தவெக கூட்டணியா? யாருங்க சொல்றது? உடனே மறுத்த அருண்ராஜ்
மதுரை: கொள்கை எதிரியான பாஜகவுடன் தவெகவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உறவும் கிடையாது என தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் நடைபெற்ற தனியார் ஏற்றுமதி கண்காட்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிப்பதற்கு தனியாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைப்பது குறித்து அறிவிப்பு இடம்பெறும். தென் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான வளர்ச்சி திட்டமாக இருக்கும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "அரசியல் கட்சிகளை சாதாரணமாக எடை போடக்கூடாது. தவெகவுடன் யார், எப்போது கூட்டணிக்கு வர வேண்டுமோ, அப்போது வருவார்கள். உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகள் வருவார்கள். எங்கள் நிலைப்பாட்டில் ரொம்பத் தெளிவாக இருக்கிறோம். கொள்கை எதிரியான பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உறவும் இருக்காது" எனத் தெரிவித்தார்.
மேலும், ஈரோட்டில் தவெக பிரச்சார கூட்டம் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடக்கும் எனத் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்த நிலையில் வேறு தலைவர்கள் யாரும் தவெகவுக்கு வருவார்களா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என பதில் அளித்துள்ளார் அருண்ராஜ்.
-
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி!











Click it and Unblock the Notifications