மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போறீங்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்…!

Google Oneindia Tamil News

மதுரை : கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. அதேநேரத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனாவான ஓமிக்ரான், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் ஓமிக்ரான்: இந்தியாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது? நேற்று எத்தனை பேருக்கு பாதிப்பு?அதிகரிக்கும் ஓமிக்ரான்: இந்தியாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது? நேற்று எத்தனை பேருக்கு பாதிப்பு?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இருந்தும் பலர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியைக் கூட செலுத்திக்கொள்ளவில்லை. இதனால், மாவட்ட ஆட்சியர்கள் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுரையில் கட்டுபாடுகள்

மதுரையில் கட்டுபாடுகள்

கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்திருந்தார். பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தியிருக்க வேண்டும் எனவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புதிய கட்டுப்பாடுகள் என அறிவிப்பு

புதிய கட்டுப்பாடுகள் என அறிவிப்பு

இந்நிலையில் நாளை முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியிருந்தது.மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும் எனவும் இது குறித்து நான்கு கோபுர வாசல்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

கூடுதல் ஊழியர்கள் நியமனம்

கூடுதல் ஊழியர்கள் நியமனம்

இரண்டு தவணை தடுப்பூசி செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது உறுதி செய்யும் வகையில் கூடுதலாக 20 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியது. நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை தற்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் நிலையில் சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரவு வாபஸ்

உத்தரவு வாபஸ்

இந்த நிலையில்தான்தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் நாளை முதல் வழக்கம்போல் பழைய கட்டுப்பாடுகளின் படியே தரிசனத்திற்கு வரலாம் என இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி சதவீதம் குறைவு

தடுப்பூசி சதவீதம் குறைவு

மதுரை மாவட்டத்தில் இதுவரை 75 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தினர் 38சதவீதம் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செல்லப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் திரையரங்குகள் திருமண மண்டபம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கத

English summary
Many more new restrictions have been imposed on Madurai from tomorrow. The Meenakshi Amman Temple in Madurai has said that only those who have been vaccinated for the first two installments will be allowed to enter the temple from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X