Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படை பட்டாளத்துடன் பசும்பொன் செல்லும் பன்னீர்.. தர்மர் ஏற்பாட்டில் ‘ரெடி’.. லிஸ்ட் வெளியிட்ட ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அக்டோபர் 30ஆம் தேதி காலை 11.30 மணியளவில் பசும்பொன்னில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, பசும்பொன்னிற்கு வராமல் சென்னை நந்தனத்திலேயே தேவர் சிலைக்கு மரியாதை செய்வதாக அறிவித்த நிலையில், ஓபிஎஸ் பசும்பொன் செல்ல இருக்கிறார்.

தன்னுடன் தேவர் குருபூஜையில் பங்கேற்க இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

தேவர் குருபூஜை

தேவர் குருபூஜை

முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அதிமுக சார்பாக கடந்த 2014ஆம் ஆண்டு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின்போது அதிமுக சார்பாக பொருளாளராக இருப்பவர் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை வாங்கி குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பார்கள். ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேவர் தங்க கவசத்தை யார் ஒப்படைப்பது என்ற பிரச்சனை எழுந்தது.

பசும்பொன் போகாத எடப்பாடி

பசும்பொன் போகாத எடப்பாடி

இதனால், ஈபிஎஸ் தரப்பின் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புக்கும் இல்லாமல் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி, தங்கக் கவசம், அரசு அதிகாரிகளால் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது. பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்றும், சென்னை நந்தனம் தேவர் சிலையில் மரியாதை செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ் அறிவிப்பு

இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியமும்‌, தெய்வீகமும்‌ எனது இரு கண்கள்‌ என்கிற முழக்கத்திற்கு'சொந்தக்காரரும்‌, நேதாஜி சுபாஷ்‌ சந்திர போஸ்‌ தலைமையில்‌ ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும்‌ படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குரியவரும்‌, தமிழ்‌ மொழி மீது தீராத பற்றுக் கொண்டிருந்தவரும்‌, ஆங்கிலப்‌ புலமை பெற்றிருந்தவரும்‌, உடல்‌, பொருள்‌, ஆவி என அனைத்தையும்‌ இந்திய நாட்டின்‌ சுதந்திரத்திற்காக காணிக்கையாக்கியவரும்‌, குற்றப்‌பரம்பரைச்‌ சட்டத்திற்கு எதிராக போராட்டம்‌ நடத்தி அதில்‌ வெற்றி கண்டவரும்‌, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக ஆலயப்‌ பிரவேசம்‌ நடத்தியவரும்‌, தொழிலாளர்களின்‌ நலன்களுக்காக பாடுபட்டவரும்‌, பத்திரிகை ஆசிரியராக திகழ்ந்தவரும்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவரும்‌, சமூக நல்லிணக்கத்திற்காக அயராது பாடுபட்டவரும்‌, அகில இந்திய பார்வர்டு பிளாக்‌ கட்சியின்‌ தமிழ்நாடு மாநிலத்‌ தலைவராக பணியாற்றியவருமான பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ திருமகனார்‌ அவர்களின்‌ 145-வது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

 பசும்பொன் செல்லும் ஓபிஎஸ்

பசும்பொன் செல்லும் ஓபிஎஸ்

முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11-30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் - தேனி எம்.பி

பட்டியல் - தேனி எம்.பி

இந்த நிகழ்வில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம்; துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான குப.கிருஷ்ணன்; துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜேசிடி பிரபாகர்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச்.மனோஜ் பாண்டியன்; கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன்; கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் சுப்புரத்தினம்‌, பெரம்பலூர்‌ மாவட்ட செயலாளரும்‌,முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன்‌; கழக செய்தித்‌ தொடர்பாளர்கள்‌ வா.புகழேந்தி மற்றும்‌ மருது அழகுராஜ்‌; மக்களவை உறுப்பினரும்‌, தேனி மாவட்ட புரட்சித்‌ தலைவி அம்மா பேரவை செயலாளருமான ப. ரவீந்திரநாத்‌; உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பி. அய்யப்பன்‌ உள்ளிட்டோர்‌ கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மர் ஏற்பாடு - தொண்டர்களுக்கு அழைப்பு

தர்மர் ஏற்பாடு - தொண்டர்களுக்கு அழைப்பு

மேலும், முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.தர்மர் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சியில், அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+