ஒரு வாக்குக்கு ரூ.1,000.. மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா.. கண்ணீர்விட்ட தவெக வேட்பாளர்!
மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வாக்காளர்களுக்கு சில கட்சிகள் பணம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் சில கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றன், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா ஜரூர் வேகத்தில் நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு ரூ.1,000 என்ற ரீதியில் பணத்தை சில கட்சிகள் வாரி இரைத்து வருகின்றன.
இந்த பணப்பட்டுவாடா கட்சி பாரபட்சமின்றி நடப்பது தான் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பணப்பட்டுவாடா நடப்பதால், மதுரை வடக்கு தொகுதியின் தவெக வேட்பாளர் கல்லணை பொது மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதுள்ளார். 20 நாட்களுக்கும் மேலாக வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்துள்ளோம்.. கால் வலி எடுக்கிறது.. இப்படியான நேரத்தில் பணப்பட்டுவாடாவை சில கட்சிகள் தொடங்கியுள்ளனர்.
பணத்தை வாங்காமல், எங்களை நம்புங்கள்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டோம் என்று பேசி இருக்கிறார். ஆனாலும் பொதுமக்கள் பணத்தை வாங்குவதிலும் குறியாக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்களை விடவும் பெண்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா அமோமாக செய்யப்பட்டு வருகிறது. தவெகவின் வரவால் இளைஞர்களை சில கட்சிகள் நம்ப மறுக்கின்றனர்.
அதேபோல் கட்சியினர் மூலமாகவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குக்கு ரூ.3 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் முக்கிய கட்சிகளும் கூட ரூ.1,000 வரை அளித்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவில் பணம் முக்கிய பங்காற்றும் என்று பார்க்கப்படுகிறது.
-
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications