மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை சிறையில் என்ன பிரச்சினை.. ஏன் கொந்தளித்தனர் கைதிகள்.. பரபர தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை சிறையில் கைதிகள் போலீஸ் இடையே மோதல்

    மதுரை: மதுரை மத்திய சிறையில் இன்று கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை ஆரப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ளது மதுரை மத்திய சிறைச்சாலை. சிறைச்சாலையில் இன்று பிற்பகல் சரியாக மூன்று மணி அளவில் திடீரென காவல்துறையினருக்கும் கைதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.

    அதாவது மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் உணவுகள் சுத்தமாக இல்லை என்றும் குடிநீர் வசதிகள் முறையாக ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்! நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்!

    ஜெயிலரிடம் புகார்

    ஜெயிலரிடம் புகார்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்திய சிறையில் அலுவலரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தும் எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யப்படாத சூழ்நிலையில்., திடீரென மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திடீர் போராட்டம்

    திடீர் போராட்டம்

    இதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை சுற்றி உள்ள சுவற்றின் மீது ஏறி நின்று கண்டன கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளை கூட்டமாக கலைக்க மேற்பட்ட காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து நிறுத்தம்

    போக்குவரத்து நிறுத்தம்

    இதனால் மதுரை மத்திய சிறை செல்லும் பிரதான சாலை முழுவதும் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை மத்திய சிறைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வாபஸான போராட்டம்

    வாபஸான போராட்டம்

    போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களுடைய பிரதான பிரச்சினைகளை ஏதேனும் ஒரு நீதிபதி நேரில் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து எங்களை துன்புறுத்தி வந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    English summary
    Prisoners staged a flash strike today and demanded better amenities in Madurai Prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X