Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாக்கடை பிரச்சனை.. மீண்டும் வந்தது எப்படி? மதுரையில் மாநகராட்சி அதிகாரிகளை பதறவிட்ட பிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மஞ்சமேடு பகுதியில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே சாக்கடை கால்வாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது மீண்டும் அதே பிரச்சனை எப்படி வந்தது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.150 கோடி ஊழல் விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களாக சிறையில் இருந்த பொன்வசந்த், கடந்த மாதம் ஜாமீனில் வெளி வந்தார்.

PTR Palanivel Thiagarajan Madurai

இதன்பின் மேயர் பதவியில் இருந்து இந்திராணி விலகினார். இதன்பின் மதுரை புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுவரை திமுக தலைமையால் மேயரை நியமனம் செய்ய முடியவில்லை. மேயர் நியமனம் விவகாரத்தில் இம்முறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மக்களை வழக்கம் போல் சந்தித்தார்.

அவருடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது மஞ்சமேடு பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்ட போது, திடீரென மக்கள் அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர். அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்தேன்.. தற்போது அமைச்சராக உள்ளேன். இந்த பகுதியில் என்ன மாற்றம் நடந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பொதுமக்கள், தண்ணீர் எல்லாம் சரியாக வருகிறது.. ஆனால் சாக்கடை மட்டும் அடைத்து நாற்றம் வீசுகிறது என்று பதில் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பக்கம் திரும்பிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்த போதே, சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எப்படி இந்த பிரச்சனை மீண்டும் வந்தது என்று கேள்வி எழுப்பினார். இதன்பின் அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் அமைதியாக நின்றனர். இதையடுத்து சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+