நாளைய பட்ஜெட்டில் வரிகள் உயரப்போகிறதா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு பேட்டி
மதுரை: அரசு திவாலாகி உள்ளதால் கண்டிப்பாக வரிகளை உயர்த்த வேண்டும் என நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதன் காரணமாக என்ன மாதிரியான வரிகள் உயரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களை செயல்படுத்துவதில் பின்வாங்கவில்லை . கண்டிப்பாக நாங்கள் செயல்படுத்துவோம். அரசு திவாலாகி உள்ளதால் பொதுவாக வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் என்று தான் நான் வெள்ளை அறிக்கையில் கூறினேன். அதற்காக நாளைக்கோ, இன்னைக்கோ ஏற்றப்போகிறோம் என்று கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார்.
தமிழ்நாட்டில் அதிக சொத்து வளங்கள் இருப்பதால்தான் கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒருகோணத்தில் பார்த்தால் இதுகூட வளர்ச்சிதானே' என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பொருளாதாரம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார்.அவரது உளரளுக்கு பதில் சொல்ல முடியாது. பொருளாதாரம் வளர்ந்த மாநிலம் தமிழகம் என்பது உண்மை. ஆனால் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கும் பாண்டியராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விமர்சித்தார்.

ஆராய்ச்சி செய்ய வேண்டும்
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற விரும்பவில்லை என்பதால் வெள்ளை அறிக்கை என்கிறார்களே என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றார் அதற்கு மறுப்பு தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசாங்கத்தின் சூழ்நிலைகளை மக்களிடம் சொல்ல வேண்டும். வெளிப்படையாக இருக்க வேண்டும் . அதற்கு தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் உள்ள விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஆராய்ச்சி செய்து உண்மைகளை அறிய வேண்டும். எனக்கே இதில் சில உண்மைகள் புரிய வில்லை.

ஜெயலலிதா
110 விதியின் கீழ், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா நிறைய திட்டங்களை அறிவித்தார். அவை எத்தனை நிறைவேற்றப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஏன் கணக்கிற்கும் திருத்தப்பட்ட கணக்கிற்கும் வித்தியாசம் வந்தது. பணம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை. இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

ஸ்டாலின் அரசு
ஒரு தவறான சூழ்நிலையை திருத்த வேண்டும் என்றால் நான்கு விஷயங்களை முதல்வர் கூறியுள்ளார். முதலில் தகவல்களை திரட்டி நீங்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மக்களிடம் அதை பொதுவெளியில் சொல்லி, ஒரு பொது விவாதம் மக்களிடையே நடக்கட்டும், நான்கு நாட்களாக இதை பற்றி பேசுகிறீர்களா இல்லையா.. ஆளு ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்களா இல்லையா,... இந்த விவாதம் நடக்கட்டும. அதில் இருந்து கொஞ்சம் புரியும். அதை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதன்பிறகு நிபுணர்களிடம் மக்களிடம் கருத்துக்களுடன் பிரச்சனையை எடுத்துச்சென்று, எப்படி இதை திருத்தலாம் என்பதை அவர்களிடம் கேட்டு அந்த கருத்தை உள்வாங்கி கொண்டு , அதன்பிறகு திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்துவோம் இதுதான் ஜனநாயகம். இது தான் முதல்வர் ஸ்டாலின் அரசின் வெளிப்படைத்தன்மை இதற்கு தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அறைகுறையாக தெரிந்து கொண்டு பேசக்கூடாது. நாளைக்குத்தான் பட்ஜெட் வருகிறது எனவே அப்படி இருக்க போகிறது. இப்படி நடக்க போகிறது என்று கூற வேண்டாம்

இவ்வளவு கடன் சுமை இல்லை
கடன் சுமை குறித்து கேட்கிறீர்கள், கலைஞர் ஆட்சியில் வாங்கிய கடன் 100 சதவீதம் மூலதனத்திற்கு செலவு செய்யப்பட்டது. ஆனால் . 3 சதவீத மூலதனத்திற்கு மட்டுமே வாங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை மறந்து 6 சதவீதம் மூலதனதிற்கு எடப்பாடி ஆட்சியில் கடன் பெற்றுள்ளனர்.அதிமுக ஆட்சியில் திட்டங்கள் துவங்க கடன் பெற்று பல திட்டங்களை துவங்கப்படாமல் ஊழல் நடைபெற்றுள்ளது. அது விரைவில் கண்டறியப்படும். ஜெயலலிதா ஆட்சியில் கூட இந்த அளவிற்கு கடன் சுமை இல்லை. ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு பார்வை திட்டம் 2023 - நோக்கம் நிறைவேறவில்லை" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications