ரூ.100 கோடி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரை பயன்படுத்தி மோசடி! முன்னாள் உதவியாளரை தூக்கிய போலீஸ்
மதுரை: ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளார் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்மேனி பகுதியில் ஒரு வீட்டு மனையை ரூ.3.5 கோடிக்கு பேசி இரு மனைகளை வாங்கி பணம் கொடுக்காமல், கட்டுமான நிறுவனத்தை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலமாக ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
மதுரையில் ரியஸ் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அதிகரித்திருப்பதால், மதுரையில் இடம் வாங்க தொழிலதிபர்கள் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதேபோல் பொன்மேனி, சூர்யா நகர், வண்டியூர், கருப்பாயூரணி, அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

யார் அந்த உதவியாளர்?
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகியோரை ரூ.100 கோடி மோசடி புகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். சட்டசபை உறுப்பினராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதில் இருந்தே அவரின் உதவியாளராக இருந்தவர் ஜெய் பாலாஜி.
பிடிஆர்-க்கு வந்த புகார்
இவர் மருதம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சுமார் ஓராண்டுக்கு முன்னதாக ஜெய் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் வரத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஜெய் பாலாஜியை நேரில் எச்சரித்து, பணியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கி இருக்கிறார். இந்த நிலையில் ஜெய் பாலாஜி மற்றும் கலாவதி இருவரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
அமைச்சர் பெயரில் மோசடி
ஜெய் பாலாஜி மற்றும் கலாவதி இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். கலாவதி பட்டயக் கணக்காளராக இருக்கிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக பாலாஜி வந்த பின், அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவரின் பெயரைக் கூறி மாநகராட்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை அமைச்சருக்கு தெரியாமல் செய்திருக்கிறார்.
மாநகராட்சியில் தலையீடு
இதன் மூலமாக பெரிய தொகையையும் சம்பாதித்துள்ளார். மாநகராட்சி ஒப்பந்தம், பிளான் அனுமதி உள்ளிட்டவை மூலமாக அதிகமாக சம்பாதித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் பல்வேறு பணிகளை செய்து தருவதாக கூறி ரூ.3.50 கோடி மதிப்பிலான இரு வீட்டு மனைகளை பெற்றுள்ளார். அதற்காக பத்திரப் பதிவுக்கு மட்டும் ரூ.77 லட்சம் செலவாகியுள்ளது.
கட்டுமான உரிமையாளருக்கு மிரட்டல்
ஆனால் சொன்னபடி எந்த பணிகளையும் செய்து கொடுக்காததால், கட்டுமான உரிமையாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் ஜெய் பாலாஜி அவரை மிரட்டியதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் மருதம் ரியல் எஸ்டேட்டில் தவணை முறையில் பணம் செலுத்தினால் மனை வழங்குவதாக ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் சாமானிய மக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றி இருக்கின்றனர்.
குடும்பத்துடன் உதவியாளர் கைது
இந்த பணத்தை குடும்பத்தினர் பெயரிலும், பினாமி பெயரிலும் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் போலீசார் ரூ.100 கோடி மோசடி செய்ததாக இருவரையும் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். தற்போது முன்னாள் உதவியாளரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications