மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவில் ஓபிஎஸ்..சேர்த்து கொள்ள தயார்! எடப்பாடி டீம் ’தலை’ க்ரீன் சிக்னல்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்?

Google Oneindia Tamil News

மதுரை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் வர வாய்ப்பில்லை என எடப்பாடி டீம் கூறி வருகின்றது. இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ள தயார் எனவும், ஆனால் ஒரு கண்டிசன் என கூறியிருக்கிறார் முக்கிய 'தலை' ஒருவர்.

அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கி உள்ளது.

 பொம்மை முதல்வர்! எடப்பாடி சொன்னது இன்னைக்கு உண்மை ஆயிருச்சு! போட்டுத் தாக்கிய ஆர்பி உதயகுமார்! பொம்மை முதல்வர்! எடப்பாடி சொன்னது இன்னைக்கு உண்மை ஆயிருச்சு! போட்டுத் தாக்கிய ஆர்பி உதயகுமார்!

 ஓபிஎஸ் ஆதரவு

ஓபிஎஸ் ஆதரவு

சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்சை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மீண்டும் ஓபிஎஸ்

மீண்டும் ஓபிஎஸ்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை முற்றாக அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தலைமை போலவே ஓ.பன்னீர்செல்வமும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அணிகள் இணைப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் தற்போதைக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

 எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

ஓபிஎஸ் மட்டுமல்லாது சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோரை கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணிக்குள்ளோ கொண்டு வந்தால் அது மேலும் பலம் சேர்க்கும் என்பதாலும் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என அந்த கட்சி விரும்புகிறது. ஆனால் மூவரையும் சேர்த்துக் கொள்ள முடியவே முடியாது என நூறு சதவீதம் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவர்கள் மீண்டும் வர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை எனவும் கூறி இருக்கிறார். இதனால் பாஜக தலைமையை எதிர்கொள்ள தயாராகி விட்டார் எடப்பாடி என அடுத்தடுத்து யூகங்கள் பரவி வருகிறது.

ஆர்பி உதயகுமார்

ஆர்பி உதயகுமார்

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் வர வாய்ப்பில்லை என எடப்பாடி டீம் கூறி வருகின்றது. இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ள தயார் எனவும், ஆனால் ஒரு கண்டிசன் என கூறியிருக்கிறார் முக்கிய 'தலை' ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அவரால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்பி உதயகுமார் தான்.

மகள் திருமணம்

மகள் திருமணம்

அவரது மகள் பிரியதர்ஷினி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள ஆர்பி உதயகுமார், மகளின் திருமணத்துடன் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள ஐயனார் கருப்புசாமி கோவிலில் அனுப்பி உதயகுமார் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்தோடு பூஜை செய்தார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து பதில் அளித்து இருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வழிநடத்த வேண்டும் என உறுதிமொழி எடுத்து அந்த வழியிலேயே நாங்கள் பயணப்படுகிறோம். இந்த பயணத்தில் எல்லோரையும் அழைக்கிறோம். எல்லோரையும் சிவப்பு கம்பளம் விரித்து வருக வருக என வரவேற்க அதிமுக தயங்கியது கிடையாது.

100% வெற்றி

100% வெற்றி

ஆனால் சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு திரித்து கூறும் நிலை உள்ளது. தாய் உள்ளத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல தயாராக இருக்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று அதிமுகவை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு பேர் தலைமையாக இருந்து வெற்றி பெற முடியவில்லை கொங்கு மண்டலத்தில் 100% வெற்றி கிடைத்தது.

 இபிஎஸ் தலைமை

இபிஎஸ் தலைமை

ஆனால் தென் மாவட்டங்களில் கிடைக்கவில்லை இதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும். ஆகையால் காலத்திற்கு ஏற்ப முடிவு எடுத்தால் தான் இயக்கத்தினை காப்பாற்ற முடியும் என தொண்டர்களின் கருத்து அடிப்படையில் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தனிப்பட்ட கருத்தின் படி எடுக்கப்படவில்லை"எனக் கூறினார் இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டு வந்தால் ஓபிஎஸ்-க்கு இடம் கிடைக்கும் என கூறியிருக்கிறார் ஆர்பி உதயகுமார்.

English summary
Edappadi team is saying that there is no possibility of OPS coming back to AIADMK as there is a conflict between Edappadi Palaniswami O. Panneerselvam on the AIADMK single leadership issue. In this case, a prominent leader has said that he is ready to include OPS again in AIADMK, but as a condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X