Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை...வாசலில் நின்று வழிபட்ட மக்கள்

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கோவில்களில் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோபுர வாசலில் நின்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்கின்றனர். நீர் நிலைகளில் புனித நீராடவும் திதி தர்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 6,983 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,67,432 அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,825 ஆக உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவை தடுப்புகள் மூலம் மூடப்பட்டன. அதேபோல் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. வாகனங்களில் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர மற்றவர்கள் வெளியில் செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்களில் தடை

வழிபாட்டுத்தலங்களில் தடை

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் கூட்டமானது வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மார்கழி மாதங்களில் அதிகாலையிலேயே குளித்து விட்டு பக்தர்கள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். தடை உத்தரவு காரணமாக ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

ராமேஸ்வரம் பகுதிகளில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் வார இறுதி நாட்களான வெள்ளி,சனி ஞாயிறு, ஆகிய நாட்களில் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோபுர வாசலில் நின்று தரிசனம் செய்தனர். சபரிமலை சென்று விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில் ஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லக்கூடிய பெண்கள் என ஏராளமானோர் கிழக்கு கோபுர வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் ஏமாற்றம்

பக்தர்கள் ஏமாற்றம்

அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்யவும் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி செய்ய வந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் யாரும் இல்லாததால் அக்னி தீர்த்த கடற்கரையில் கடலில் இறங்கி கால் நனைத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர், அப்துல் கலாம் நினைவிடமும் வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள் மூடல்

சுற்றுலா தலங்கள் மூடல்

ராமேஸ்வரம் ஒரு சுற்றுலாத் தலம் என்பதாலும் சிறிய பகுதி என்பதாலும் ராமேஸ்வரத்தில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பேருந்து நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை உட்படுத்த பின்னரே அனுமதிக்க வேண்டும் எனவும், அதேபோல பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் பகுதி பொதுமக்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்செந்தூர், பழனி

திருச்செந்தூர், பழனி

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் பாதையாத்திரையாக நடந்து செல்கின்றனர். வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். வாசல்வரை சென்றும் சாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்பது பக்தர்களின் ஆதங்கமாக உள்ளது. திடீரென தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பேருந்துகள் கிடைக்காமலும் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+