நம்ப வைத்து கழுத்தறுக்கும் திமுக.. பாஜக மாதிரிதான் செயல்படுது.. ஏன் குறை சொல்லணும்? - சீறிய சீமான்!
மதுரை : தி.மு.கவே பா.ஜ.கவாக செயல்படுகிறது, பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
Recommended Video
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இன்றைக்கு பாஜக, காங்கிரஸ் நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டார்கள். நம்ப வைத்து கழுத்தறுப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளது என விமர்சித்துள்ளார்.

சீமான்
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவர்களுக்கு வழங்கலாம் என நீதியரசர் தெரிவித்தார். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் தொடர்பாக மறுபடியும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்ப வைத்து
ஆட்சிக்கு வரும் முன் 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டார்கள். நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள். நம்ப வைத்து கழுத்தறுப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளது. இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும் என தெரிவித்தார்.

அக்னிபாத்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுப்பது குறித்து பேசிய சீமான், கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும்போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆகவே கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இப்படித்தான் நடக்கும். இளம் வீரர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ப்பதற்காக தான் பாஜக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது என சீமான் குற்றம்சாட்டினார்.

பாஜகவை குறைகூறலாமா?
மேலும், பேசிய அவர், கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அழைத்து திமுக நிகழ்ச்சி நடத்தியது. கருணாநிதி சிலையைத் திறக்க வேறு ஆட்களே கிடையாதா? பாஜக ஆளும் மாநிலத்தில் கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிரதமரையோ, துணை ஜனாதிபதியையோ அழைத்ததில்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸை குறை கூறுவது ஞாயம் இல்லை. திமுகவே பாஜகவாக இயங்குகிறது பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications