நாங்க ரெடி!நீங்க ரெடியா! ஒரு கை பார்த்துவிடுவோம்! கேப்பில் கிடா வெட்டிய செல்லூர் ராஜூ! பாஜக கலக்கம்
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் எல்லோரும் தனித்து களம் காண்போம் எனக் கூறி பாஜகவை கலக்கம் அடைய வைத்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தனித்து போட்டியிடத் தயாரா என திமுகவுக்கு சவால் விடுவது போல் செல்லூர் ராஜு பேசியிருந்தாலும் கூட, அதன் உள் அர்த்தம் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றிவிடுவதற்கான திட்டமோ என சந்தேகிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 4 தொகுதிகளில் வெற்றிபெறுவதே பெரிய விஷயம் என்றும், இதில் 40 தொகுதியில் எப்படி வெற்றிபெற முடியும் எனவும் கிண்டல் அடித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ள விவகாரம் ஒன்று, அதிமுக -பாஜக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனியாக நிற்போம், கொள்கைகளை கூறி வாக்குக் கேட்போம், மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் எனக் கூறியிருக்கிறார் செல்லூர் ராஜூ. இவர் பேசியது திமுகவுக்கு சவால் விடுவது போல் வெளியே தெரிந்தாலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றிவிடும் முயற்சியோ என சந்தேகிக்கப்படுகிறது.

தனித்து போட்டி
அதிமுக -பாஜக கூட்டணி நீடித்து வரும் நிலையில் திடீரென தனித்து போட்டியிடத் தயார் என்று செல்லூர் ராஜூ பேசியது ஏன் என, பாஜக தரப்பு காரணத்தை கண்டறிந்து வருகிறது. இதனிடையே கூட்டணி விவகாரத்தில் செல்லூர் ராஜூ மூலம் எடப்பாடி பழனிசாமி ஆழம் பார்க்கிறாரோ எனவும் இதற்கு அரசியலில் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

மொழித் திணிப்பு
இதனிடையே மொழிக்கொள்கையை பொறுத்தவரை அதிமுகவின் நிலைப்பாடு என்றுமே அண்ணாவின் நிலைப்பாடு தான் என்றும் யார் மொழியை திணித்தாலும் சரி அது மத்திய அரசாகவே இருந்தாலும் கூட ஒரு போதும் அதிமுக ஏற்காது எனத் தெரிவித்தார். செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வசீகரிக்கும் தலைவர்கள்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மக்களை வசீகரிக்கும் தலைவர்களாக திகழ்ந்தார்கள் என்றும் ஆனால் இன்று அத்தகைய ஆற்றல் கொண்ட தலைவர்கள் யாருமே இல்லை எனத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 4 தொகுதிகளில் வெற்றிபெறுவதே பெரிய விஷயம் என்றும், இதில் 40 தொகுதியில் எப்படி வெற்றிபெற முடியும் எனவும் செல்லூர் ராஜு கிண்டல் அடித்துள்ளார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications