ஸ்டாலின் அரசு அதானியின் கைக்கூலி அரசு - ஒரேயடியாக கொந்தளித்த எச்.ராஜா.. என்னப்பா நடக்குது?
மதுரை : தமிழக அரசு கார்ப்பரேட் அரசு, 35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு காண்ட்ராக்ட் கொடுத்துள்ள அரசு, தமிழகத்தில் ஸ்டாலின் அரசு அதானியின் கைக்கூலி அரசாங்கம் என கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
Recommended Video
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
மேலும், கனல் கண்ணன் பெரியார் சிலை பற்றிப் பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.
தேச விரோதமாக நாட்டின் இறையாண்மைக்கு நாட்டு நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.
அனல் பறக்கும் கனல் கண்ணன் மேட்டர்.. ஆதரவாக குதித்த எச்.ராஜா - பெரியார் சிலை வாசங்களை நீக்கனுமாம்

கொடுப்பினை வேண்டும்
செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசுகையில், "எதற்குமே ஒரு கொடுப்பினை வேண்டும். 50 ஆண்டு சுதந்திர தினம் வந்தபோது எல்.கே.அத்வானி சுவர்ண ஜெயந்தி ரத யாத்திரையை நாடு முழுவதும் நடத்தினார். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். இப்போது 7-வது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நூறாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் பொழுதும் இதே அரசாங்கம் தொடர்ந்து கொண்டாடும் இதுதான். இந்த அரசின் கொடுப்பினை.

பாதை தெரியவில்லையா?
இந்து முன்னணியின் உரிமை மீட்பு மாநாட்டில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கண்ல் கண்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரது வீட்டிற்கு போலீஸ் மிரட்டுவதற்கு சென்றது. ஆனால், நடராஜரை இழிவுபடுத்திப் பேசியவரின் வீட்டிற்கு பாதை தெரியவில்லையா? காவல்துறையினருக்கு. ஆண்டவரை இழிவுபடுத்தி பேசலாம், நேற்று பிறந்த மனிதனை இழிவுபடுத்தி பேசக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது?

திராணி இல்லாத காவல்துறை
ஆண்டவர் நடராஜரை பற்றி இழிவாகப் பேசியவரை கைது செய்ய துப்பில்லாத திராணி இல்லாத தமிழக காவல்துறை கனல் கண்ணன் வீட்டிற்கு சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது, ஒரு முட்டாள் தன் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாடு காவல்துறையின் தமிழக அரசின் அப்படித்தான் உள்ளது. போலி பாஸ்போர்ட் புகழ் டேவிட் ஆசீர்வாதம் கமிஷனராக இருந்தபோது அதிகமாக போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. இது தமிழக காவல்துறையின் பாரம்பரியம், தேச விரோதமாக நாட்டின் இறையாண்மைக்கு நாட்டு நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நான் ஆதாரமில்லாமல் பேசமாட்டேன்.

கருத்துரிமை கிடையாதா?
நடிகரும் சினிமா சண்டை பயிற்சியாளருமான கணல் கண்ணன் என்பவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்று மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு கருத்துரிமை கிடையாதா? அவர் கருத்துரிமையை தடுப்பதற்கு டிஜிபி சைலேந்திரபாபு யார்? டேவிட்சன் தேவாசீர்வாதம் யார்? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூரில் கிறிஸ்துவ பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதைப் பற்றி இதுவரை செய்திகளிலோ ஊடகங்களோ விவாதம் நடைபெறவில்லை.

யாருக்கும் பாதுகாப்பு இல்லை
இவ்வளவு மோசமான கையாலாகாத ஒரு காவல்துறை, தேசிய சக்திகளுக்கு எதிராக மிரட்டல் நடவடிக்கை, சட்ட ஒழுங்கு பிரச்சனையில் அமிஞ்சிக்கரையில் இளநீர் வெட்டுவது போல் தலையை வெட்டுகின்றனர். இது தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கு தெரிந்திருக்கிறது. பா.ஜ.க வடசென்னை எஸ்.சி அணி மாவட்ட தலைவர் கே.பாலச்சந்தர் பட்டப்பகலில் கொல்லப்படுகிறார். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலுக்கு காரணம் காவல்துறையை முழுக்க முழுக்க திமுக மற்றும் வி.சிக கட்சிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதே காரணம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.

யார் ஆதீர்வாதத்தில்?
தேசிய சக்திகளுக்கு எதிராக உங்கள் மிரட்டல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். ஆயிரம் கனல் கண்ணன் கருத்து சொன்னால் தமிழகம் அரசு என்ன செய்யும்? டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இவர்கள் யார் ஆசிர்வாதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. தேசிய சக்திகளுக்கு எதிராக செயல்படும் உங்கள் மிரட்டல் போக்கை தவிர்த்து விடுங்கள். உங்கள் வேலைகளை பார்த்தால் நல்லது.

அதானியின் கைக்கூலி அரசு
100 ரூபாய் விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை ஐந்து சதவீதம் வரி உயர்வு செய்தால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 120 ரூபாய்க்கு ஏன் விற்கிறீர்கள்? ஏழை மக்கள் இட்லி மாவு வாங்குபவர்களுக்கு வரி இல்லை ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசாங்கம் கார்ப்பரேட் அரசாங்கம். 35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு காண்ட்ராக்ட் கொடுத்துள்ள அரசு. தமிழகத்தில் ஸ்டாலின் அரசானது அதானியின் கைக்கூலி அரசாங்கம்.