வைகை நதியில் கார் பார்க்கிங்.. புகார் அளித்தும் தொடரும் அத்துமீறல்.. கொதிக்கும் சு.வெங்கடேசன்!
மதுரை: வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கதவுகளின் சாவி காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய 3 தரப்பிடம் மட்டுமே இருக்கும் சூழலில், யார் கதவுகளை திறந்துவிட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைகை நந்தி, கார் பார்க்கிங்காக மாறி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதுதொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து கார்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால் இன்றும் வைகை நிதியில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருப்பு கதவுகள் அமைக்கப்பட்டு மாநகராட்சியால் பூட்டு போடப்பட்டிருக்கும். இந்த பூட்டு திறக்கப்பட்டது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கோரிப்பாளையம் செல்ல இந்த பாதை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், காவல்துறையினர் எப்போதும் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருப்பர்.
இதனையும் மீறி வைகை நதி கார் பார்க்கிங் செய்ய பயன்படுத்தப்பட்டது எப்படி என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். இதுதொடர்பாக மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
"நதி கார் பார்க்கிங்காக பயன்படுத்தப்படுகிறது" என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். "அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது.
நாங்கள் திறந்துவிடவில்லை" என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.
வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. "நதி கார்ப்பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். "அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது; நாங்கள் திறந்துவிடவில்லை" என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.@Collector_MDU @Mdu_CityPolice @mdu_corp #VaigaiRiver #Madurai #MaduraiDistrictCollector #PublicWorksDepartment #MaduraiCorporation #VaigaiRiverProtection
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 20, 2026
வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளன.



Click it and Unblock the Notifications
