தேரோடும் எங்க சீரான மதுரையில... மாசி வீதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருக்கல்யாணம் முடிந்து இறைவனும் இறைவியும் தம்பதி சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ள அழகைக் காண லட்சக்கணக்கான பக்தத்கள் மதுரையில் திரண்டுள்ளனர்.
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு வந்து திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
Recommended Video
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி பட்டாபிஷேகமும் 13ஆம் தேதி திக்விஜயமும் நடைபெற்றது.
நேற்றைய தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அலங்காரமாக மணமேடையில் எழுந்தருளியிருந்த மீனாட்சி அம்மனுக்கு வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலி அணிவிக்கப்பட்டது. பிரியாவிடை அம்மனுக்கும் தாலி அணிவிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து வைபவம் நடைபெற்றது.

கல்யாண விருந்து
சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்யாண விருந்து நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், 500 க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இவர்களுடன் 1000 தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என சுவையான உணவு வழங்கப்பட்டது.

சித்திரை தேரோட்டம் கோலாகலம்
நேற்றிரவு அம்மன் பூப்பல்லக்கிலும், சுவாமியும், பிரியாவிடையும் தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரைக்கு மாறிய தேரோட்டம்
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த தேரோட்டம் மாசி மாதத்தில் நடைபெற்றது. எனவேதான் அந்த வீதிகளுக்கே மாசி வீதிகள் என்று பெயர் வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில்தான் கள்ளழகர் கோவில் திருவிழாவுடன் இணைந்து சித்திரை மாதத்திற்கு மாற்றினார் திருமலை நாயக்கர்.

மாசி வீதிகளில் வலம் வந்த தேரோட்டம்
இதற்காகவே மாசி வீதிகள் என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் மதுரையில் தேரோட்டம் கீழமாசிவீதியில் தொடங்கி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே ஆடி அசைந்து அழகு மிளிர மிதந்து வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications