மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காமராஜர் படிக்க வைத்தார்.. இந்த அரசு குடிக்க வைக்கிறது".. திமுக மீது ஜி.கே. வாசன் பாய்ச்சல்

தமாகா தலைவர் ஜிகே வாசன், திமுக அரசை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: காமராஜர் மாணவர்களை, படிக்க வைத்தார்... ஆனால் இந்த அரசு குடிக்க வைக்கிறது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.

66 Vs 43..இபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளிய ஓபிஎஸ்! 5 ஆண்டுகளில் செய்யாததை தீடிரென செய்த ஓ.பன்னீர்செல்வம் 66 Vs 43..இபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளிய ஓபிஎஸ்! 5 ஆண்டுகளில் செய்யாததை தீடிரென செய்த ஓ.பன்னீர்செல்வம்

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டா.. அப்போது அவர் திமுக அரசை சரமாரி தாக்கி பேசினார்.

 நேசித்த மண்

நேசித்த மண்

அவர் பேசும்போது, எல்லாத் துறையிலும் மதுரை சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்... அவர் மிகவும் நேசித்த மண் மதுரை.. நேர்மை, தூய்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு காமராஜர்... அதுபோல்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தூய்மை, நேர்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

 தமாகா மட்டும்தான்

தமாகா மட்டும்தான்

அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கட்சி தமாகா மட்டுமே.. தமிழகத்தில் திமுகவின் ஒரு வருட ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் மக்களின் எந்த ஒரு எண்ணங்களையும் பிரதிபலிக்காத ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது... சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது... தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயலில் இனியாவது திமுக ஈடுபட வேண்டும்... ஆனால் அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவது சரியில்லை.

 குடிக்க வைக்கிறது அரசு

குடிக்க வைக்கிறது அரசு

பூரண மதுவிலக்கு கொண்டு வந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் 6 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு படிக்க கற்று தந்தார்.. இந்த அரசு மாணவர்களுக்கு குடிக்க கற்றுத்தரும் அரசாக இருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது.. காமராஜர் படிக்க வைத்தார். ஆனால் இந்த அரசு இளைஞர்களை குடிக்க வைக்கிறது... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, மாணவர்களும், மாணவிகளும், பள்ளி சீருடையிலேயே மதுபாட்டிலுடன் திரியும் வீடியோக்களை யூடிப்பிலே நமது பெற்றோர்கள் பார்த்து வயிற்றெரிச்சல் அடைகிறார்கள்..

 டாஸ்மாக் - பிசாசு

டாஸ்மாக் - பிசாசு

ஏழை எளிய மக்களின் வருமானம் டாஸ்மாக் மூலம் பறிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் 2200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தமிழகத்தை நாசமாக்கி வருகிறது. மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி வந்த அரசு, இன்று போதை என்ற பிசாசுவின் பிடியில், சிக்க வைக்க நினைக்கிறது.. இதற்கு நடுவில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டமும் அதிகரித்துள்ளது. இதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.

 படிச்சு பாருங்க

படிச்சு பாருங்க

தேர்தல் சமயத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தாங்கள் வாக்குறுதியில் என்ன கொடுத்தோம் என்பதை திமுக மறுபடியும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பணபலம், எதிலும் பணம் என்று மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கோட்பாடாக, கொள்கையாக இருக்கக்கூடாது என்று வாசன் கேட்டுக் கொண்டார்... திமுகவை கடுமையான விமர்சித்து, வாசன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
tmc leader gk vasan says, people are not happy in the dmk government and attacks mk stalins election promises தமாகா தலைவர் ஜிகே வாசன், திமுக அரசை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X