மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து.. நடந்தது என்ன?.. யார் மீது தவறு?.. அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!
மதுரை: மதுரை-நத்தம் சாலையில் செட்டிகுளம் இடையே கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான பறக்கும் பாலம் கட்டுமான பணிகளில் ஏராளமான ஊழியர்கள் நேற்று வழக்கம் போல கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
Recommended Video
அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேம்பால விபத்து பகுதியினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியதாவது:-

அஜாக்கிரதைதான் காரணம்
இந்த மேம்பால விபத்து தவிர்க்கப்பட வேண்டியது. ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையாலயே முழுக்க முழுக்க இந்த விபத்து நடந்துள்ளது. பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, 160 டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200டன் ஹைட்ராலிக் பதிலாக குறைவாக பயன்படுத்தபட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இது பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுத்தியதன் காரணமாக நடைபெற்றுள்ளது. எனவே முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனவும்

விசாரணை அறிக்கை
பணி நடைபெற்ற இடத்தில் மேற்பார்வை பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர் மட்டுமே இருந்துள்ளார். சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் பணிகள் நடைபெற்றுள்ளது, ஹைட்ராலிக் ஜாக் தன்மை குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். என்ஐடி தொழில்நுட்ப நிபுணரான திருச்சி பாஸ்கர் தலைமையிலான குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்

அளிக்கப்படுமா
விபத்தில் உயிரிழந்தவருக்கு நிதியுதவி அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். அவர்களுடைய கண்ணோட்டத்தில் விசாரணை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். விசாரணை குழுவானது விபத்தை தொடர்ந்து பாலத்தின் பணிகளை முழுமையாக ஆய்வுசெய்யும். விபத்து வரும் அறிக்கையை பொறுத்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கைகளை எடுப்பார். தி.மு.க அரசு அமைந்த பின் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய அரசு சார்பில் தர பரிசோதனை குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஒப்பந்தங்கள் ரத்து
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, ஒப்பந்தங்களையும் ரத்து செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தமிழகத்தில் இனி நடைபெறும் பாலம் , சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் LOG ஷீட் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம். திட்ட பணிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணிகளை தொடர்வோம். இவ்வாறு ஏ.வ.வேலு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications