தவெகவின் 2வது மாநாடு.. விஜய் கைக்குச் சென்ற முக்கிய ரிப்போர்ட்.. மதுரையைத் தேர்வு செய்ததன் பின்னணி
மதுரை: தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை அருகே உள்ள எலியார்பத்தியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை தவெக தலைவர் விஜய் மதுரையில் நடத்த முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தவெக சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளே மதுரையில் மாநாடு நடக்கக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரதான கட்சிகளில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தவெக சார்பாக முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தவெக தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தவெக தேர்தல் பணிக்கான அலுவலகத்தை விஜய் நேற்று முன்தினம் பார்வையிட்டார். இதன் மூலமாக டிஜிட்டல் மீடியா பரப்புரையை தவெக தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ல் நடக்க உள்ளது. இதற்காக 120 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதனை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

விரைவில் காவல்துறை தரப்பில் மாநாட்டுத் திடல் பார்வையிடப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேரைக் கூட்டுவதற்கு தவெக முடிவு எடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகளை வைத்து மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தவெக 2வது மாநாடு மதுரையில் நடத்த என்ன காரணம் என்ற கேள்வி எழுந்தது.
தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட நிலையில், 2வது மாநாடு கொங்கு மண்டலத்தில் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கோவையில் தவெகவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை அறுவடை செய்யும் வகையில் மாநாடு நடத்தினால், கட்சிக்குக் கூடுதல் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கும்.
ஆனால் விஜய் மதுரையைத் தேர்வு செய்ததற்கு அவரின் கைகளுக்குச் சென்ற ஒரு ரிப்போர்ட் தான் முக்கிய காரணம். அதாவது ஒவ்வொரு மாதமும் தவெகவின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா குழு தரப்பில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக மற்றும் அதிமுக தரப்பிலும் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போன்ற கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகள் தவெக பக்கம் திரும்புவதைக் கருத்துக்கணிப்புகள் மூலம் விஜய் அறிந்துள்ளார்.
ஆனால் தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வாக்கு சதவிகிதம் குறைவாக இருந்திருக்கின்றன. அதேபோல் தவெக தொடங்கப்பட்டதில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விஜய் ஒருமுறை கூட வரவில்லை. இதனால் தென் மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் மதுரை மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்த விஜய் முடிவு எடுத்துள்ளார்.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தவெக அங்கு ஸ்கோர் செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜயின் சுற்றுப்பயணத்தின் போது தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் தவெக தலைமை முடிவு எடுத்துள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் விஜய் அதிகளவிலான வாக்குகளைப் பிரிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications