விஜய் சொல்லித்தான் அண்ணா திமுகவை தொடங்கினார் – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
மதுரை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், விஜயை பார்த்துதான் அண்ணா திமுகவையே தொடங்கினார் என்று கிண்டலடித்துள்ளார் [Udhayanidhi Stalin trolls Vijay].
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," மகளிர் உரிமைத் தொகையுடன் கூடிய சிறப்பு தொகுப்பாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட பொது மக்களிடம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சிகள் அப்படித்தான்
கடந்த வாரம் விருதுநகரில் நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாட்டில் 1 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மதுரையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் தஞ்சாவூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளேன். திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்கவுள்ளேன்.
பொது மக்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்கியத்தில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இந்த பரிசுக்காக அப்பாவுக்கு நன்றி சொல்லுங்கள்.. எங்கள் அண்ணாவுக்கு நன்றி சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்சி. அதையெல்லாம் மீறி தான் செயல்பட வேண்டும்.
விஜய் மீது விமர்சனம்
இதேபோல் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனாவுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்குவோம் என்றபோது, முடியாது என்றார்கள். நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் நலனுக்காக செயல்படுவோம். மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாது என்றனர். கடந்த 2023 ஆண்டில் இருந்து உரிமைத் தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம். கூடுதல் போனஸாக திராவிட மாடல் 2.0 அமைந்தவுடன் உரிமைத் தொகை 2,000 ஆக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஒன்றை சொன்னால் அதைச் செய்வார் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சேலம் தவெக கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து யார் பொறுப்பேற்க வேண்டுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்" என்றார். விஜயின் அரசியல் வருகையால் தான் திமுக இவ்வளவு பணத்தை கொடுப்பதாக விமர்சித்துள்ளதாக அவர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு உதயநிதி, அண்ணாவே அவரைப் பார்த்துதான் திமுக வை தொடங்கினார்" என்று கிண்டலாக பதில் அளித்தார். அவரின் இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications