கும்பாபிஷேகத்தில் குளறுபடி! மதுரை மீனாட்சி அம்மனை இன்று மாலை தரிசிக்கிறார் விஜய்!
மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய், இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இந்த கோயிலுக்கு அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடந்தது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.

இதற்காக காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கு சாலை மார்க்கமாக பயணித்து அரசு மருத்துவமனையில் நடக்கும் விழாவில் விஜய் கலந்து கொள்கிறார். இதையடுத்து அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் அரசினர் மாளிகையில் மதிய உணவு அருந்தும் விஜய், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 5 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மனைத் தரிசிக்கிறார்.
இந்த தரிசனத்தை முடித்துக் கொண்டு மதுரையில் தனி விமானம் மூலமாக சென்னைக்கு திரும்புகிறார் விஜய். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கும்பாபிஷேகத்தில் ஏற்பாடுகளில் குளறுபடி, பக்தர்கல் மீது புனித நீர் தெளிக்கவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை, போலீஸார் கெடுபிடி, சுவாமி தரிசனத்திற்கு விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி, பாஸ் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
எனினும் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்கு விஜய் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
