ஸ்வீட் கேட்ட மதுரை வீரமணி.. கேஷ் ஆன் டெலிவரி போட்டு, ஊரை விட்டே ஓட விட்ட நெட்டிசன்கள்! ஆளை காணோமாமே

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை வீரமணி வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் வேற மாநிலத்துக்கே போய்விட்டேன்.. உங்களால் ரோடு ரோடாக அலைகிறேன். வீட்டுக்கு கூட போகவிடாமல் செய்துட்டீங்களே? ஊரில் எங்க அம்மா, அப்பா எல்லாம் சண்டைக்கு வருகிறார்கள்.. தினமும் ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிகிறேன். தங்குவதற்குகூட யாரும் இடம் கொடுக்கவில்லை" என்றெல்லாம் புலம்பியிருக்கிறார்.. இன்னமும் கேஷ் ஆன் டெலிவரி பிரச்சனை ஓயவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி, "வணக்கம் நண்பர்களே" என்று மதுரை வட்டார பேச்சு நடையில் பேசும் வீடியோக்களால் பிரபலமானவர்..

Madurai Veeramani Instagram Influencer Netizens Prank

காமெடியாக பேசுவது, சில நேரங்களில் மற்றவர்களை திட்டுவது என வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் கேரளாவுக்கு டூர் செல்வதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூஆர் கோடைப் பகிர்ந்து, உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் என்று ஃபாலோயர்களிடம் கேட்டிருக்கிறார்.

மதுரை இன்ஸ்டா பிரபலம் வீரமணி

அவரது கோரிக்கையை ஏற்று ஃபாலோயர்களும் 6,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த பணத்தை கொண்டு கேரளம் சென்று வந்துவிட்டதாகவும் விடியோ வெளியிடடிருந்தார்.. அதன் பிறகு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஃபாலோயர்கள் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி, தனது வீட்டின் முகவரியையும், செல்போன் நம்பரையும் வெளிப்படையாக வெளியிட்டிருக்கிறார்.

தனக்கு தீபாவளிக்கு ஏகப்பட்ட ஸ்வீட் பாக்ஸ் வரும் காத்து கொண்டிருந்தவருக்கு தலைவலிதான் ஆரம்பமாகி உள்ளது.. நெட்டிசன்கள், வீரமணியை வைத்து பிராங்க் செய்ய தொடங்கிவிட்டனர். அவரது முகவரிக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை ஆர்டர் செய்ய துவங்கி விட்டனர்..

வீரமணியின் முகவரியை கொடுத்து, பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி, ஸொமேட்டோ தளங்களின் மூலம் உணவுப்பொருள்கள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றையும் நெட்டிசன்கள் ஆர்டர் செய்தனர்.

கேஷ் ஆன் டெலிவரி

பால் பாக்கெட் முதல் டிவி, பிரிட்ஜ் வரை 100-க்கும் மேற்பட்ட பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.. ரூ.1.69 லட்சம் மதிப்பிலான டிவி, ஜேசிபி மிஷின் என பொருட்கள் வரிசையாக வந்ததுடன், ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யப்பட்டதாக மீம்ஸ்களும், ஸ்கிரீன் ஷாட்களும் வைரலாகின.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீரமணி, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.. பொருட்களுக்கான பணத்தை தருமாறு டெலிவரி ஊழியர்கள் கேட்கவும், அவர்களிடமும் கடுமையாக நடந்துகொண்டாராம்..

பிறகு மற்றொரு வீடியோவை பதிவிட்டு, "உங்கள் காலடியில் மண்டியிடுகிறேன்.. தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். நான் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறேன்.. அதையெல்லாம் வாங்க என் கிட்ட காசு இல்லை" என்று கதறி வீடியோ வெளியிட்டார். அப்போதுகூட ஆர்டர்கள் வீடு தேடி வருவது நின்றபாடில்லையாம்.

மேட்ரிமோனி அக்கவுண்ட்கள்

மேட்ரிமோனி அக்கவுண்ட்கள், இலவச சிறுநீரக தானம் போன்ற விளம்பர பதிவுகள் செய்யப்பட்டதால், அவருக்குத் தொடர்ந்து மர்ம அழைப்புகளும் வந்த வண்ணம் இருந்தன

ஆனால் அதற்கு பிறகு வீரமணியை காணவில்லை.. கையில் பெரிய பைகளுடன் அவர் செல்லும் வீடியோ ஒன்று, மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. வீட்டைப் பூட்டிவிட்டு வீரமணி வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பிறகு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட வீரமணி, "நான் வேற மாநிலத்துக்கே போய்விட்டேன்.. உங்களால் ரோடு ரோடாக அலைகிறேன். வீட்டுக்கு கூட போகவிடாமல் செய்துட்டீங்களே? ஊரில் எங்க அம்மா, அப்பா எல்லாம் சண்டைக்கு வருகிறார்கள்.. தினமும் ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிகிறேன். தங்குவதற்குகூட யாரும் இடம் கொடுக்கவில்லை..

கதறல் வீடியோ

நான் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டால், வீரமணி உயிருடன் இல்லை என்று என்னுடைய ஃபாலோயர்ஸ்கள் நினைத்துவிடுவார்கள்.. அதுக்காகவே தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன்" என்று புலம்பி கடைசியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இப்போதுள்ள வீட்டை காலி செய்துவிட்டு, வேறு இடம் செல்ல போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் இப்போது அவர் எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை.. வீரமணியின் வீடியோவை வைத்து நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்ப்பதையும் நிறுத்தவில்லை..

கேரளா போலீஸ்

இதனிடையே, வீரமணியின் போட்டோவை குறிப்பிட்டு கேரள போலீசார் ஒரு விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளனர்.. அதில், "சமூக ஊடகங்களில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் டிரெண்டுகளில் நாம் மூழ்கிவிடும்போது, நமது சொந்தப் பாதுகாப்பைப் பற்றி மறந்துவிடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

வீரமணிக்கு நடந்த இந்த சம்பவம் காமெடியாக நகைச்சுவையாக இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அந்தப் பொருள்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள்தான்.. அவர்களின் உழைப்பு, நேரம் வீணடிக்கப்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகிறார்கள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+