மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை வரை சென்றும்.. அழகிரி "சூசகமாக" அழைத்தும் கூட.. சந்திக்க செல்லாத ஸ்டாலின்.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை வரை சென்றும் கூட முதல்வர் ஸ்டாலின் தனது சகோதரர் மு.க அழகிரியை சந்திக்காதது ஏன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Madurai வரை Stalin சென்றும் Azhagiri-ஐ சந்திக்கவில்லை.. பின்னணி என்ன?

    கொரோனா பணிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு பயணம் மேற்கொண்டார். காலை மதுரைக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் மதுரை ஆட்சியர் கூட்டத்தில் நடக்கும் மீட்டிங்கில் கலந்து கொண்டார். திமுக அமைச்சர்கள் பி மூர்த்தி, பிடிஆர் பழனிவேல், ஆட்சியர் அனிஷ் சேகர், திமுக கூட்டணி எம்பிக்கள் ஆகியோர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர்.

    இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த 4 நாட்களுக்கு எப்படி.. வானிலை மையம் ரிப்போர்ட் இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த 4 நாட்களுக்கு எப்படி.. வானிலை மையம் ரிப்போர்ட்

    இன்று முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க அழகிரியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இருவரும் இன்று சந்திப்பு நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் சந்திப்பு நடக்கவில்லை.

    ஏன்

    ஏன்

    மதுரை வரை சென்றும் கூட முதல்வர் ஸ்டாலின் தனது சகோதரர் அழகிரியை சந்திக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வருகிறார் தெரிந்ததும் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு. க அழகிரி அளித்த பேட்டியில், ஸ்டாலின் என் வீட்டுக்கு வந்தால் சந்தோசம். என்னுடைய வீட்டிற்கு வந்தால் முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சியோடு வரவேற்பேன், என்று அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.

    திருச்சி

    திருச்சி

    ஆனால் அழகிரி இப்படி அழைத்தும் கூட ஸ்டாலின் இன்று அவரை சந்திக்கவில்லை. மதுரை சென்றவர், அப்படியே கிளம்பி திருச்சிக்கு சென்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் இருக்கிறது. ஸ்டாலின் தற்போது அரசு பயணமாக கொரோனா பணிகளை பார்வையிட்டு வருகிறார். நேற்று கொங்கு மாவட்டங்களில் முதல்வர் பார்வையிட்டார்.

    பார்வையிட்டார்

    பார்வையிட்டார்

    இன்று மதுரையில் பார்வையிட்ட ஸ்டாலின், அதன்பின் திருச்சி சென்றார். நேற்று இந்த பயணத்தை தொடங்கும் முன்பே முதல்வர் ஸ்டாலின் இது கட்சி ரீதியான பயணம் இல்லை என்று தெளிவாக அறிவித்தார். நான் அரசு பயணமாக செல்கிறேன். என்னை கட்சிக்காரர்கள் சந்திக்க வர வேண்டாம். கட்சி ரீதியாக என்னுடன் பேச யாரும் விரும்ப வேண்டாம்.

    கட் அவுட்

    கட் அவுட்

    என்னை வரவேற்க போஸ்டர்கள், கட் அவுட்கள் யாரும் வைக்க கூடாது என்று குறிப்பிட்டார். இதனால்தான் கொங்கு மண்டலம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர வேறு யாரையும் கட்சி ரீதியாக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை. கொரோனா தடுப்பு பணியின் போது கட்சியினரை சந்திப்பதை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை.

    இன்று

    இன்று

    இன்றும் இதே காரணத்திற்காகவே மு. க அழகிரியை ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கூறுகிறார்கள். இது ஆட்சி சார்ந்த பயணம், கட்சி ரீதியானதோ, குடும்ப ரீதியான பயணமோ கிடையாது. அதனால்தான் மதுரை வரை சென்றும் கூட அங்கு கட்சியின் முக்கிய தலைவர்களை ஸ்டாலின் சந்திக்கவில்லை, இதனால்தான் அழகிரியையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    English summary
    Always Care for others and show your warmthness towards them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X