திமுக பொதுக்குழு கூட்டம்.. ஒருநாள் முன்பே மதுரை வரும் ஸ்டாலின்.. அழகிரியை சந்திப்பாரா?
மதுரை: திமுக பொதுக்குழு கூட்டம் முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் நடக்கவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி மதுரை மாவட்டம் உத்தங்குடியில் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள், எம்பி-க்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இதனால் மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேடையில் மட்டும் சுமார் 10 இருக்கைகள் போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அழைத்து வருவதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் இரவே வரும் நிர்வாகிகள் பங்கேற்க மதுரையின் நட்சத்திர ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

20 கிமீ ரோடு ஷோ
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மே 31ஆம் தேதி மாலையே முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை விமான நிலையம் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதோடு, 20 கிமீ ரோடு ஷோ நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் தொடங்கி அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், காளவாசல் பைபாஸ், ஆரப்பாளையம், ஜெயில் ரோடு என்று ரோடு ஷோ நடக்கவுள்ளது.
விலகி இருக்கும் அழகிரி
இதனால் மதுரையின் முக்கிய சாலைகள் சீர் செய்யப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுகவில் இருந்து மு.க.அழகிரி மொத்தமாகவே விலகி இருக்கிறார்.
துரை தயாநிதி உடல்நலம்
திமுக ஆட்சியமைந்த போதும் கூட மு.க.அழகிரி, அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இதற்கு ஸ்டாலின் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக துரை தயாநிதி உடல்நிலைப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க சென்ற போது, சகோதரர் அழகிரியுடன் ஸ்டாலின் உரையாடினார்.
அழகிரியை சந்திப்பாரா?
அப்போதே இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் துரை தயாநிதியும் உடல்நலம் நன்றாக இருப்பதால், மதுரை வரும் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் குடும்பத்தினை சந்திப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அமைச்சரான பின் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்த போது, அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பொதுக்குழுவில் அழகிரி?
இந்த நிலையில் மதுரையில் முதல்முறையாக திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.அழகிரி பார்வையாளராக கூட பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. மதுரையில் மு.க.அழகிரிக்கு என்று இன்னும் ஆதரவாளர்கள் இருந்து வரும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications