பிரபல நடிகையின் 14 வயது மகன் மாடியில் இருந்து குதித்து த*கொலை.. டியூஷன் போக சொன்னதால் விபரீதம்
மும்பை: இக்காலத்தில் குழந்தைகள் எமோஷனலாக மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட எடுக்கக்கூடாத முடிவை எடுத்துவிடுகிறார்கள். அப்படித் தான் பிரபல நடிகை ஒருவரின் மகன் டியூஷன் செல்லச் சொன்னதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதேநேரம் இந்தளவுக்கு ஒரு புரோடெக்டட் சூழலில் வளர்வதால் குழந்தைகளுக்கு வெளியுலகம் பெரியளவில் தெரிவதே இல்லை.

குழந்தைகள்
இதனால் சிறு சோகம் அல்லது நினைத்தது நடக்காமல் போகும் போது அவர்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கேட்பது கிடைக்காத போது அல்லது நினைத்தது நடக்காது போது என்ன செய்ய வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மோசமான முடிவுகளையும் அவர்கள் எடுக்கிறார்கள். இப்போது அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.
பிரபல நடிகையின் மகன்
பிரபலமான இந்தி மற்றும் குஜராத்தி டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய நடிகை ஒருவரின் 14 வயது மகன் சின்ன விஷயத்திற்குத் தனது உயிரையே மாய்த்துக் கொண்டு இருக்கிறான். டியூஷனுக்கு செல்வது தொடர்பான விவகாரத்தில் அந்தச் சிறுவனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. டியூஷன் செல்லுமாறு தாய் கூறிய நிலையில், அதை அந்தச் சிறுவன் ஒப்புக்கொள்ளவில்லை.
இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சின்ன விஷயத்திற்கே மனம் உடைந்த அந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அவர்கள் வீடு கண்டிவாலியில் உள்ள புரூக் கட்டிடத்தின் 51வது மாடியில் இருக்கிறது.. தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோபத்தில் அந்த சிறுவன் புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.
சிறுவன் தற்கொலை
சில மாடிகள் கீழே இறங்கிய அந்த சிறுவன் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் தாயாரிடமும் இது குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தாய் வாக்குமூலம்
சிறுவனின் தாயார் தனது வாக்குமூலத்தில், மாலை 7 மணியளவில் டியூஷன் செல்லுமாறு மகனிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஆனால், சிறுவன் டியூஷன் செல்லத் தயக்கம் காட்டியுள்ளார். இதையடுத்து கண்டித்துவிட்டு, கட்டாயம் டியூஷன் சென்றே தீர வேண்டும் என தாய் கூறிய பிறகே, அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக அந்த நடிகை வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்..
இருப்பினும், பின்னர் கொஞ்ச நேரத்திலேயே காவலாளி ஒருவர் ஓடி வந்து நடிகையிடம் அவரது மகன் கட்டிடத்திலிருந்து விழுந்ததாகத் தெரிவித்தார். தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அந்தப் பெண் துடிதுடித்துப் போனதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விபத்து மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும், விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications